வெள்ளலூர் நொய்யல் ஆற்றங்கரைகளில்  எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மற்றும் யுவா பவுண்டேஷன் சாா்பாக ’கஸ்துாரி வனம்’  என்ற பெயரில் மரக்கன்றுகள் நடும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக சுற்றுச் சூழல் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை நகரை பசுமையாக்கும் நோக்கத்தில், எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மற்றும் யுவா பவுண்டேஷன், ’கஸ்துாரி வனம்’ என்ற திட்டத்தை  துவக்கியுள்ளது.

இந்த சுற்றுச் சூழல் முயற்சியின் துவக்கமாக எஸ்.எஸ்.வி.எம் பள்ளி அருகே உள்ள நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் மரக்கன்றுகள்  நடப்பட்டன. நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தலைவர் சசிகலா கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். உலக வெப்பமயாதல், பருவநிலை மாற்றங்களை தவிர்க்க, இத்தகயை முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிக அளவில் மரங்களை நடுவதால், அதிக மழையும், நல்ல சூழலையும் பெற முடியும். இதையட்டி நொய்யல் கரையோரம் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் மரக்கன்றுகளை நடப்பட்டன என்றார்.

எஸ் எஸ் வி எம் நிறுவனர் முனைவர் மணிமேகலை மோகன்  பேசுகையில், யுவா அமைப்புடன் இணைந்து அரச மரம், புங்கை மரம், வேம்பு உள்ளிட்ட பலவகையான ஒரு லட்சம் மரக்கன்றுகளை கோவையில் நட முடிவு செய்துள்ளோம் என்றார். மேலும் பள்ளியின் மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய அவர் உங்களுடைய பிறந்தநாளில் குடும்பத்தார்களுக்கு கேக் மற்றும் இனிப்பு வகைகளை வழங்குவதற்கு பதிலாக ஒரு மரக்கன்றை கொடுக்கவும் என்றார். நிகழ்ச்சியில் சந்திரா யுவா பவுண்டேஷன் நிறுவனர் சி. சிவநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

541 total views, 3 views today