Home Blog Page 4

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும் – பா.ம.க நிறுவனர் இராமதாசு.

காஞ்சிபுரம் மாவட்ட சாலவாக்கத்தை அடுத்த கலிப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்பட்டுள்ள இந்த வெறுப்புச் செயல் கண்டிக்கத்தக்கது – இராமதாசு.

அண்மைக்காலமாகவே தந்தைப் பெரியார், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் சிலைகளை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு சாராரின் வக்கிர உணர்வையே வெளிப்படுத்துகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், அதை கொள்கைகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். மாறாக, பெரியாரின் சிலைகளை சேதப்படுத்துவது, அவமதிப்பது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய செயல்களால் தந்தை பெரியாரை எவராலும் சிறுமைப்படுத்த முடியாது. மாறாக, இதை செய்தவர்கள் தான் சிறுமைப்பட்டு போவார்கள் என்றார் இராமதாசு

60 total views, 3 views today

தேனியில் ரஜினி உருவ பொம்மை எரித்து போராட்டம் ……

தேனியில் ரஜினி திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன்பு ரஜினியின் உருவ பொம்மை எரித்து ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் திடீர்போராட்டம் நடத்தினரர்கள். இந்த போராட்டத்தில்50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தந்தை பெரியாரை பற்றி துக்ளக் விழாவில் அவதூறு கருத்துக்களை கூறியநடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடர் கழக நிர்வாகிகள் அறிக்கையாகயாக வெளியிட்டு இருந்தனர் அதனைத் தொடர்ந்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியதை கண்டித்து தேனி பூதிப்புரம் ரோட்டில் அமைந்துள்ள ரஜினி திரைப்படம் ஓடும் தனியார் திரையரங்கம் முன்பு ஆதி தமிழர் பேரவை கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் ரஜினியின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தின்போது போலீசார் தடுத்து நிறுத்தில் போலீசாருக்கும் உருவபொம்மை எறிக்க வந்த தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் கூறும்போது நடிகர் ரஜினிகாந்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்..

126 total views, 3 views today

கும்பகோணம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை 12 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நேற்று 20-01-2020 இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக
கும்பகோணம் உட்கோட்டத்தில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்களைத் தடுக்கும்
பொருட்டு கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவுடி கும்பகோனாம் தாலுக்கா
காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், உட்கோட்ட குற்றத் தடுப்பு உதவி
ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்ததில்
20,01,2020 அதிகாலையில் வளையப்பேட்டை ரவுண்டான அருகில் இருசக்கர வாகனத்தில்
முகமுடி அணிந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 1) அலெக்ஸ் (22), தபெ, அமுல்தாஸ்,
பாதகோவில் தெரு, அம்மாபேட்டை பை-பாஸ், பேலசத்திரம், தாராசுரம், 2) முகோல் (20), த/பெ,
முருகன், வளையபேட்டை அக்ரஹாரம், தாராகரம், 3) ஜெகதீஸ் (20), த/பெ. உலகநாதன், குடியான
தெரு, அம்மாபேட்டை, 4) அடால்ட் ஹிட்லர் (19), த/பெ. ஆளஎப்ட்ராஜ், மிஷள் தெரு, தாராசுரம்
ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி
ஆகியவற்றை கைப்பற்றியும் செல்போள், பணம் ஆகியவற்றை மீட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய
விசாரணையில் இவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர் பகுதிகளில் வேலை செய்து வருவதாகவும்
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்து வழிப்பறி சம்பவத்தில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்னர். இவர்கள் கொடுத்த தகவலின்படி இவர்களது கூட்டாளிகளான
மேலும் இருவரை உட்கோட்ட தனிப்படையில் தேடிவருகின்றனர். வழிப்பறி சம்பவத்தில்
ஈடுபட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது. இது போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.

1,799 total views, 3 views today

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார்

0
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார் . புதுடெல்லி: பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதையடுத்து 2020-21ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

66 total views, 3 views today

நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0
நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்கு உள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ஐசக் என்பவர் கார் மீது சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது . இதையடுத்து ஐசக் காரை நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஐசக் மற்றும் அறந்தாங்கியை சேர்ந்த வெள்ளைச்சாமி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சர்குணம் ஆகிய 3 பேர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பயணிகள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

366 total views, no views today

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற வளாகம் ?

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற வளாகம் ?

1500 உறுப்பினர்கள் அமரும் வகையில் முக்கோண வடிவில் நாடாளுமன்ற புதிய வளாகம் கட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசிடம் அகமதாபாத்தை சேர்ந்த ஹெச்.சி.பி. டிசைன் எனும் கட்டிட வரைகலை நிறுவனம் திட்டம் சமர்ப்பித்துள்ளது. 900 உறுப்பினர்கள் அமரும் வகையில் மக்களவை மைய பகுதியும், 1350 உறுப்பினர்கள் அமரும் வகையில் நாடாளுமன்ற மைய பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்தில் சவுத் பிளாக்கின் பின்புற பகுதிக்கு பிரதமரின் இல்லத்தை இடமாற்றுவது, நார்த் பிளாக்கின் பின்புற பகுதிக்கு குடியரசு துணைத் தலைவரின் இல்லத்தை இடமாற்றுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற மைய பகுதியை வடிவமைத்த குழுவின் தலைவரான பிமல் படேல் ((Bimal Patel)), தற்போது எம்பிக்கள் அமரும் வரிசைகளில் முதல் 2 வரிசையில் மட்டுமே மேஜைகள் இருப்பதாகவும், புதிய வளாகத்தில் அனைத்து வரிசையிலும் மேஜைகள் இருக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

182 total views, no views today

போலியோ சொட்டு மருந்து முகாம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

உளுந்தூர்பேட்டையில்  போலீயோ சொட்டு மருந்து முகாமை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்களும் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா அவர்களும் துவக்கிவைத்தனர். உடன் மருத்துவக்குழுவினரும் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தினரும் கலந்து கொண்டனர் 5  வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது

92 total views, 3 views today

3.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் பேட்டி !!

0

கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

50 total views, no views today

Registration

Forgotten Password?

Close