Home Blog Page 3

கையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்.பி பங்கேற்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தனது கையெழுத்தை பதிவு செய்த அவர், இந்தச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது பெண்கள் தான் என குறிப்பிட்டார்.

63 total views, 3 views today

பாபநாசம் அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே பொன்மேய்ந்தநல்லுார் அலங்காநத்தம் குடியான தெருவை சேர்ந்த ராஜப்பா மகன் ராஜாங்கம்  என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்வதற்காக குழிதோண்டும் பொழுது  ஒரு விஷ்ணு சிலை மற்றும் ஒரு அம்பாள் சிலை சுமார் 2 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை  கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த அரசு அலுவலர்கள் சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

147 total views, no views today

கும்பகோணத்தில் மனித சுவர் எழுப்பி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

0

கும்பகோணத்தில் மனித சுவர் எழுப்பி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் குடியுரிமை சட்ட திருத்தம, குடியுரிமைப் பதிவேடு அமலாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்துள்ள மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

கும்பகோணம் பகுதியில் சென்னை முதல் குமரி வரை இணைக்கும் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சி மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஓய்வூதியர் சங்கம் மாதர் சங்கம் வர்த்தக சங்கம் குடியுரிமை எதிர்ப்பு ஆதரவாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

கும்பகோணத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் நகர செயலாளர் கே செந்தில் குமார் ஜமாத்தார்கள் மக்கள் சபை மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ் மன்பயி கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமர்தம் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் சு கல்யாணசுந்தரம் குடந்தை எம்எல்ஏ அன்பழகன் மனிதநேய மக்கள் கட்சி முகமது செல்லப்பா ராஜ் முஹம்மது இந்திய காங்கிரஸ் கட்சி டிஆர் லோகநாதன், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாக குழு உறுப்பினர் முகம்மது யாசீன், எஸ்டிபிஐ குடந்தை இப்ராஹிம் இந்திய தவ்ஹீத் ஜமாத் ரஹமத்துல்லா திராவிடர் கழகம் கௌதமன் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இமாம் அலி மக்கள் அதிகாரம் ஜெயபாண்டியன் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

480 total views, no views today

1 கோடி பேர் வேலை இழந்ததற்கு யார் காரணம் என பிரதமர் மோடியைப் பார்த்து ராகுல் கேள்வி

2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்* .

நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை முன்னிறுத்தி ராகுல் காந்தி தலைமையில் இன்று ‘யுவா ஆக்ரோஷ்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

எல்லா நாடுகளுக்கும் ஒரு முதன்மை பலம் உள்ளது. அமெரிக்காவுக்கு பலமாக இராணுவம் உள்ளது. சவூதி அரேபியாவிற்கு எண்ணெய் வளம் உள்ளது. அதே போல் இந்தியாவிற்கு பலமாக கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஆனால் வேதனையான விஷயம் என்னவென்றால் 21ம் நூற்றாண்டின் இந்தியா அதன் முதன்மை பலத்தை வீணடிக்கிறது. இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி முதலீட்டாளர்களை தடுத்து விட்டார் பிரதமர் மோடி.

2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி பற்றி மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் பையில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார் மோடி. இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்களே, உங்கள் குரல் ஒடுக்கப்பட அனுமதிக்காதீர்கள். வேலைவாய்ப்பின்மையை எதிர்த்து கேள்வி கேளுங்கள்.இவ்வாறு ராகுல் பேசினார்.

81 total views, 3 views today

ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமந்தீர்த்தம் மாம்பட்டி அருகில் அமைந்துள்ள

இட்லப்பட்டி ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7 ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 197 மாணவ மாணவிகள் மற்றும் 23 ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பள்ளி தாளாளர் கண்ணன் முன்னிலையில் அரூர் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் முனைவர் கண்ணன். காவல் சிறப்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டு காவலன் செயலி அதாவது காவலன் எஸ் ஓ எஸ் செயலி குறித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

69 total views, 3 views today

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் .

0

51 total views, 3 views today

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

கும்பகோணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 71 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது

 இவ்விழாவிற்கு சுதந்திரதின போராட்ட வீரரும் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் ஆகியவைபாதுகாக்கப் படவேண்டும் 

மதசார்பற்ற நாட்டில் மதங்கள் கலக்கக்கூடாது இந்தியாவில் ஏழு பெரிய மதங்கள் பழமொழிகள் ஒன்றிணைக்கப்பட்ட நாடுதான் நமது இந்தியா 

இந்தியாவில் மதம் என்பது தனியுரிமை  ஆனால் மத்திய அரசு மதசார்பற்ற விட்டு விட்டு மத சார்பில் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது 

இந்திய நாடு என்பதை விட்டுவிட்டு இந்து நாடு என்பதை வலியுறுத்தி வருகிறது  அரசியலமைப்பு சட்டத்தை மதித்து 130 கோடி இந்தியர்கள் உலகத்திலேயே அதிக அளவில் வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இந்தியர்களே எனவே இந்தியாவில் மதம் வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் லெனின் மாவட்ட செயலாளர் பாரதி நகர செயலாளர் தமிழழகன் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் லோகநாதன் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி விவேகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

96 total views, 3 views today

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி

எனது வாக்கு..! எனது உரிமை ..!

இளம் தலைமுறையினர் மற்றும் வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் நாளை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறோம்.

வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை .18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே இத்தினத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதை நத்தம் பகுதி அரசு அலுவலர்கள் ஒருங்கிணைத்து நடத்தி னர்.

60 total views, no views today

Registration

Forgotten Password?

Close