Home Blog Page 2

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி

0

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட திருவள்ளூர் மாவட்டம் பத்தியால் பேட்டையை சேர்ந்த திரு.சாகுல் ஹமீது,வயது 62 என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானது முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

30 total views, 3 views today

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் 7 பேர் மற்றும் வாணியம்பாடியில் 2 மற்றும் திருப்பத்தூரில் 1 நபருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆங்காங்கே உள்ள
அரசு மருத்துவமனையில் கொரோன சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

78 total views, 6 views today

பழங்குடியின மக்களுக்கு சொந்த பணத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெண் ஊராட்சி மன்ற தலைவர்

0

பழங்குடியின மக்களுக்கு சொந்த பணத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெண் ஊராட்சி மன்ற தலைவர்

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்பட்டிருக்கும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பெரியகளக்காட்டூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுடைய வறுமையை கண்டு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மணிமேகலா நந்தகுமார் அவர்களுடைய சொந்த பணத்தில் 15 வகையான அத்தியாவசிய பொருட்களை சுமார் 25ற்க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக சென்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில் பெரியகளக்காட்டூர் ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.ஜெயபாரதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.

27 total views, no views today

கொரோனா வைரஸ் தொற்று நிவாரண நிதியாக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒரு மாத சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்

0

கொரோனா வைரஸ் தொற்று நிவாரண நிதியாக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒரு மாத சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி மன்ற தலைவர்கள், கொரோனா நிவாரண நிதிக்காக மொத்தம் 24 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களும் சேர்ந்து தங்களது ஒரு மாத சம்பள தொகையை சேர்த்து மொத்தம் 24.000 ரூபாயை திருவாலங்காடு வட்டார ஊராட்ச்சி மன்ற தலைவர்கள் சார்பாக நலச்சங்கத்தின் தலைவர் தொழுதாவூர் திரு.D.அருள்முருகன் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதிநாதனிடம் வழங்கினர். இந்த தொகையினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தரா். மேலும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களிடம், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, கிராமங்தோறும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த காய்கறி, பால் மற்றும் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.

36 total views, no views today

உழவர் சந்தையில் ரூ.150க்கு காய்கறிகள் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதையும் நேரில் ஆய்வு செய்தார் துணை முதல்வர்.


தேனி மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரானோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் மாவட்ட முழுவதும் நோய் தடுப்பு பணிகளில் ஈடுட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளை தமிழ் நாடு துணை முதல்வர் O. பன்னீர்செல்வம் அவர்கள்.தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் .மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.சாய் சரண் தேஜஸ்வி. மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ். பெரியகுளம் சார்- ஆட்சியர் செல்வி. சினேகா.பாராளுமன்ற உறுப்பினர் 0 P.ரவிந்தர்நாத்குமார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.செந்தில் அண்ணா.அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் ஆகியோருடன் சென்று உணவு தரம் பற்றி சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். பின்பு ஊரடங்கு உத்தரவின் காரணமாக காய்கறி மலிகை சாமான்கள் கிடைப்பதில் மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்க்காக.150 ரூபாய்க்கு 25 வகை காய்கறிதொகுப்பு தேவைபடும் மக்களுக்குஅனைத்து வீடுகளுக்கும் சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டது.

51 total views, 6 views today

மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை திருவொற்றியூர் அருகில்

0

மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் விநாயகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 37). இவர், சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரபத்திரன், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாக மது குடிக்க முடியாமல் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாட்டுமந்தை மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த வீரபத்திரன், திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான வீரபத்திரனுக்கு உஷா என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளனர்.
மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.

36 total views, no views today

அரூரில் கிராம நுழைவாயில் வேலி அமைக்க உத்தரவு…

அரூர் அருகே வெளிமாநிலம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து வந்த நபர்களை சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு கிராம நுழைவாயில் வேலி அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வேடகட்டமடுவு கிராமத்திலிருந்து பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வேலைக்கு சென்று சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளனர். தகவல் அறிந்த வருவாய் அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்பட்டு வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளதாக 209 நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதன் அடிப்படையில் சார் ஆட்சியர் பிரதாப் தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பஞ்சாயத்து தலைவர் ராணி முத்து உள்பட வருவாய் அதிகாரிகள் நேரில் சென்று வெளியூரில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்பு அவர்களின் வீட்டின் முன்பு கொரோனா தொற்று, தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும்,

கிராமத்தில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் கிராம நுழைவாயில் வேலி அமைக்கவும், வெளிநபர்கள் யாரும் உள்ளே வரவும், கிராமத்திலிருந்து வெளியே யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தினார். மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மருந்து பொருட்கள் ரேஷன் பொருட்கள் உள்பட அத்தியாவசியத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து தருகிறோம் என சார் ஆட்சியர் பிரதாப் கிராம மக்களிடம் தெரிவித்தார்.

39 total views, no views today

அரூர் மருத்துவத் துறையினருக்கு உயர்தரமான மாஸ் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு வழங்கிய அழகு அரூர் குழுவினர்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தொடர்ந்து இரவு பகல் என்று பாராமல் 144 தடை உத்தரவில் கொரோனா  வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஆகியோருக்கு அழகு அரூர்  குழுவின் சார்பாக மதிய உணவு வழங்கி வந்தனர் .

அரசு அதற்கு தடை விதித்து நிறுத்தி வைத்தனர்.பின்பு மீண்டும் அதை தொடர அரசு உத்தரவிட்ட நிலையில் மீண்டும் இன்று மதிய உணவு வழங்கும் பணி தொடங்கியது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க பணியில் ஈடுபட்டுள்ள  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ₹6000 மதிப்பிலான‌ உயர்தரமான  மாஸ்குகள் வழங்கப்பட்டன. அதேபோன்று வடமாநிலத்தில் இருந்து அரூரில் தங்கி  வந்து வேலை செய்துகொண்டிருந்த வடமாநிலத்தவர்கள் 144 தடையின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் வேலை இன்றி மற்றும் உணவின்றி தவித்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அழகு அரூர் குழுவின் சார்பாக இன்று உணவு வழங்கப்பட்டது.

36 total views, no views today

Registration

Forgotten Password?

Close