Home Blog Page 1095

கோவை மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேர் கைது

0
கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்பு நிதி மற்றும் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மாநகராட்சியை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாநகராட்சியை நோக்கி வந்தனர். அப்போது அவர்களை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தி உக்கடம் போலீசார் கைது செய்தனர். இதில் 15 பெண்கள் உள்பட 150 பேர்கைது செய்யப்பட்டனர்.

1,702 total views, 6 views today

கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் கையெழுத்து இயக்கம் நடத்தியது.

0
முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தும் கையெழுத்து இயக்கம் நடந்தது.
 வெள்ளிக்கிழமை. ஜும்மாவிற்கு பின் கோவை அத்தர் ஜமாத் பள்ளிவாசல் முன்பு.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்க்குழு உறுப்பினர் A.S இஸ்மாயில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தாா். இதில் மாவட்ட தலைவா் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவை அத்தாா் ஜமாத் பள்ளி வாசல் தலைவா் பஷீா் அகமது, செயலாளா் ஷா நவாஸ், முத்துவல்லி நூா் முஹம்மது, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவா் முஸ்தபா, மற்றும் நிா்வாகிகள் காதா், அலி, கலந்து கொண்டு தொழுகைக்கு வந்தவா்கள், பொதுமக்கள் இடம் கையெழுத்து பெற்றாா்கள் இதில் 2000க்கு மேற்பட்டாோ்கள் கையெழுத்து போட்டாா்கள்.

1,219 total views, 9 views today

மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு: இஸ்லாமிய கூட்டமைப்பு யோசனை

0
திருவனந்தபுரம்: மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை, கேரள சன்னி மகல்லு கூட்டமைப்பு விதித்துள்ளது. 

சுமார் 8 ஆயிரம் மசூதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இந்த அமைப்பின் சமீபத்திய கோழிக்கோடு கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முஸ்லிம் லீக் தலைவருமான பனக்காடு ஹைதரலி ஷிகாப் தங்கல் கூறுகையில், ” மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமபோது அவை பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமான அறிவிப்புகள் மற்றும் தொழுகைக்கான அழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எந்த செயலிலும் இஸ்லாமியர்கள் ஈடுபடக்கூடாது. எந்த பிரச்னையையும் மிகவும் கவனமாக சிந்தித்து கையாள வேண்டும்” என்றார்.
இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு:

கூட்டமைப்பின் முடிவை பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் முகமது கரக்குன்னு இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஒரு பகுதியில் உள்ள பல்வேறு மசூதிகளில் பல்வேறு நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படும்போது, அது அப்பகுதி மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். தற்போதுள்ள சமுதாய சூழ்நிலையில் மகல்லு கூட்டமைப்பின் முடிவு மிகவும் பொருத்தமானதே என்றார்.


அகில இந்திய இஸ்லாகி இயக்கத்தின் பொதுச் செயலாளர் உசைன் மடவூர் கூறுகையில், இந்த யோசனை பொதுமக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். மதச்சார்பற்ற கலாச்சாரத்தை வலுப்படுத்தும். ஒரு பகுதியில் உள்ள ஒரு மசூதியிலிருந்து மட்டுமே ஒலிபெருக்கி மூலம் தொழுகை அழைப்பு விடுத்தால் போதுமானது. அந்த பகுதியில் உள்ள அனைத்து மசூதிகளிலுமிருந்து தனித்தனியாக ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கத் தேவையில்லை என்றார்.

1,785 total views, 9 views today

உக்கடம் பகுதியில் குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

0
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது 30). தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.
கரும்புக்கடையைச் சேர்ந்தவர் சகானா. இவர்களது திருமணம் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு நடந்தது. இவர்களுக்கு ரிஸ்வான் (6), ரசீத் (3½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்– மனைவிக்கிடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சகானா கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் ஷேக்பரீத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை தான் ஷேக்பரீத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகடை வீதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை கணபதி நஞ்சப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் கணேசன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லோக நாயகி (45). கடந்த ஆண்டு கட்டிட வேலையில் ஈடுபட்ட கணேசன் தவறி விழுந்து விட்டார். அதன் பின்னர் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
சிகிச்சைக்காக கடன் வாங்கியிருந்தனர். அதனையும் அவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் கணவன்– மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த லோகநாயகி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1,648 total views, 9 views today

விநாயகர் சதுர்த்தியன்று 24 மணிநேரமும் அலுவலர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்: கலெக்டர்

0
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:–
கோவை மாவட்டத்தில் 17–ந்தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலங்களின் போதும், சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடந்த ஆண்டை போல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் அனுமதித்துள்ள கரையக்கூடிய சாயத்தை மட்டுமே பூசி இருக்க வேண்டும். களி மண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ்களில் சிலை செய்து வைத்து விற்பனை செய்ய கூடாது. இதை கண்காணித்து தேவையான நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலைகள் கரைக்கப்படும் குளங்களில் போதிய வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்க மின்வாரியமும், மாநகராட்சியும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இந்த ஆண்டும் செல்ல வேண்டும்.
பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலர்கள் மேற்கண்ட நாட்களில் அந்தந்த பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இந்த விழா நடைபெற ஒருங்கிணைந்து சிறப்பான வகையில் செயல்பட வேண்டும். 
இவ்வாறு அவர் என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், பொள்ளாச்சி சப்–கலெக்டர் ரஷ்மிசித்தார்த்ஜகடே, மாநகர காவல்துறை துணை ஆணையர் ரம்யாபாரதி, கோவை வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, துணை ஆணையர் (கலால்) வெங்கடேசன், அனைத்து வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1,949 total views, 9 views today

கோவை வணிக வரி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற டீக்கடைக்காரர் சிறையில் அடைப்பு

0
கோவை டாக்டர்.பால சுந்தரம் ரோட்டில் வணிக வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த செல்வக்குமார் (வயது59) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடையில் விற்பனை செய்யப்படும் டீயில் கலப்படம் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அதிகாரிகள் இந்த கடையில் சோதனை நடத்தினர். மேலும் டீக்கடை அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகளவில் இடத்தை ஆக்கிரமித்து இருந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். இதனால் மனமுடைந்த செல்வகுமார் கடையின் முன்பு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர்.
அவர் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

1,749 total views, 6 views today

பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை திராவிட கட்சிகள் புதைத்து விட்டன: பிருந்தாகரத் பேச்சு

0
கோவை, செப்.10–
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட குழு சார்பில் அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை முன்னிட்டு தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிரான சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
இன்றைய மத்திய அரசு முதலாளிகள் நன்மை குறித்து சிறப்பு விவாதங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு விவாதங்கள் நடத்துவது இல்லை.
மக்களவையில் தீண்டாமை குறித்து சிறப்பு விவாதங்கள் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் தீர்மனம் நிறைவேற்றியது. ஆனால் பெரு நிறுவன முதலாளிகளுக்கான நேரம் ஒதுக்கி விவாதம் நடத்தும் மத்திய அரசு தலித் மக்களுக்கு நேரம் ஒதுக்கி விவாதிக்க தயாராக இல்லை.
இதுதான் மோடி அரசின் குணாதிசயம். இந்து மதவாத சக்திகள் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்து வருகிறது. அடக்குமுறையினால் தலித் மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இதற்கு எதிராக போராட வேண்டும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க., அ.தி.மு.க., தற்போது பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளை புதைத்து விட்டு வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார்கள்.
சம உரிமை மூலமே பொருளாதார ஏற்றத்தாழ்வை சீர் செய்ய முடியும் என்றார் அம்பேத்கார். சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டும்.
தனியார் துறையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும். மேலும் தலித் மக்களுக்கு அவர்களது விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

1,708 total views, no views today

கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட 2 தனியார் காப்பகங்களில் தங்கி இருந்த 44 குழந்தைகள் மீட்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

0
கோவை,
கோவையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 தனியார் காப்பகங்களில் தங்கி இருந்த 44 குழந்தைகளை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

தனியார் காப்பகங்கள்

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் கார்னர் ஸ்டோன், கிறிஸ்துகம்பேசன் ஆகிய 2 தனியார் குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வந்தன. இந்த காப்பகங்கள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு புகார் சென்றது.
எனவே இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தர விட்டார். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விஜயா, கோவை மாநகர ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் நேற்று காலையில் அந்த 2 தனியார் காப்பகங்களுக்கும் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அனுமதி இல்லை

அப்போது அந்த 2 காப்பகங்களில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு போதிய இடவசதி, சமையலறை வசதி, குளியலறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததும், அனுமதி இல்லாமல் அந்த 2 காப்பகங் களும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த காப்பகங்களை மூட உத்தரவிட்டனர். மேலும் அங்கு தங்கி இருந்த 6 சிறுமிகள் உள்பட 44 குழந்தைகளை மீட்டு உக்கடம் மற்றும் அத்திப்பாளையம் பிரிவில் உள்ள காப்பகங்களில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விஜயா கூறியதாவது:–

குழந்தைகள் மீட்பு

கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வந்த 2 குழந்தைகள் காப்பகங்களிலும் போதிய இடவசதி இல்லை. அங்கு 6 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். அதில் 6 சிறுமிகளும் உள்ளனர். அந்த சிறுமிகளை தனியாக வைக்காமல், சிறுவர்களுடன் சேர்த்தே தங்க வைத்து உள்ளனர். அத்துடன் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட வில்லை.
மேலும் அந்த 2 காப்பகங்களில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு போதிய உணவு பொருட்களும் இருப்பு வைக்கப்பட வில்லை. அத்துடன் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வில்லை. எனவே அங்கு தங்கி இருந்த குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர்.

பெற்றோருக்கு தகவல்

மீட்கப்பட்ட 44 குழந்தைகளில் 38 பேர் கோவை உக்கடத்தில் உள்ள டான்போஸ்கோ காப்பகத்திலும், 6 சிறுமிகள் கோவை–சத்தி ரோடு அத்திபாளையம் பிரிவில் உள்ள மரியாலயா காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருசில குழந்தைகளுக்கு பெற்றோர் உள்ளனர். ஒருசில குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை. ஆனால் உறவினர்கள் உள்ளனர்.
எனவே இது குறித்து அந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு உள்ளது. அந்த குழந்தைகள் அனைவரும் குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் பெற்றோருடன் செல்ல விரும்பினால், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படுவார்கள். இல்லை என்றால் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1,650 total views, 6 views today

Registration

Forgotten Password?

Close