Home Blog Page 1094

கூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை: விஜயகாந்த்

0
தே.மு.தி.க. 11–ம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளான வறுமை ஒழிப்பு தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் நடந்தது.
விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:–
தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கட்சி பாகுபாடின்றி, முதல்–அமைச்சரான நீங்கள் நல்லது செய்தால் நான் கட்சியை கலைத்து விட்டு உங்கள் கட்சியில் இணைக்க தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்கு நல்லது செய்யத்தான் கட்சியை நடத்தி வருகிறேன். நான் ஜாதி, மொழியை கடந்து கட்சியை நடத்தி வருகிறேன். எனவே வருகிற 2016–ம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. கூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தாலே போதும்.
இவ்வாறு அவர் பேசினார்.

881 total views, no views today

கோவை விமான நிலையம் விரைவில் விரிவுப்படுத்தப்படும்: மத்திய மந்திரி அசோக்கஜபதி ராஜு பேட்டி

0

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக்கஜபதி ராஜூ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இடம் கையகப்படுத்தும் பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது. மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தந்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும். சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதற்கு தரமற்ற கட்டுமான பணிதான் காரணம். இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் தான் விசாரணை நடத்தும்.
வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் இணைப்பு விமானங்கள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல் படுத்தப்பட்டு உள்ளது. அவற்றை செயல்படுத்தினாலே போதுமானது. மேலும் விமான போக்குவரத்து தொடர்பாக புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

1,237 total views, 9 views today

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

0

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

தற்போது ரூ.83 கோடி செலவில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் திடீரென கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என்று ஆய்வு நடத்திய அவர் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார். பின்னர் ஆஸ்பத்திரி முழுவதும் 1 மணி நேரம் சுற்றிப்பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது:–
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆஸ்பத்திரியில் சாலைகள் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதனால் நோயாளிகளை ஸ்ட்ரக்சரில் வைத்து வார்டுக்கு கொண்டு செல்லும் போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் புதிய சாலை அமைக்கவும், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை சரிசெய்து புதிய குழாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 
ஆய்வின் போது அரசு ஆஸ்பத்திரி டீன் எட்வின் ஜோ, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருந்தனர்.

1,003 total views, 3 views today

கோவையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம்: கனிமொழி பங்கேற்பு

0

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் இப்போதே களத்தில் இறங்கி விட்டன.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் தி.முக. மும்முரமாக உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு அமைக்கப்பட்ட குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்சி நிர்வாகிகள், வணிகர்கள், தி.மு.க. பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள்.
கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதற்காக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, டி.கே.எஸ். இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகியோர் கோவை வந்தனர்.
அவர்கள் கோவை காந்திபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் கோவை மாவட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.

987 total views, 9 views today

நேற்று மக்காவில் நடந்த விபத்தில் கோவை சாா்ந்த பெண் மரணம்

0


கோவை செல்வபுரம் பகுதியில் குடியிருக்கும் ஜெய்னுலாபுதீன் இவரது மகன் முஹம்மது இஸ்மாயில் வயது 35 இவா் சிறு வயதில் கேரளா மாநில கோழிகோட்டில் கோழி தீவனம் வியாபாரம் செய்ய சென்று விட்டாா். அங்கு இவருக்கு நிரந்திர தொழில் அமைந்து விட்டது. பிறகு கேரளா சாா்ந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்டாா். பிறகு நல்ல முறையில் தொழில் நடந்தது. அங்கு இருந்து சென்ற வருடம் பொள்ளாச்சி டவுன் பகுதியில் சொந்தமாக ஆயிஷா பீட்ஸ் என்ற பெயாில் கோழி தீவன கடை திறந்தாா். பிறகு தன் குடும்பத்தை கேரளா மாநில பாலக்காடு அருகில் இருக்கும் கல்மண்டம் மீனா நகா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, குடிவந்தாா். இவருக்கு சில மாதத்திற்க்கு முன் ஹஜ் செய்ய நிய்யத் வைத்து பாலக்காட்டில் உள்ள தனியாா் ஹஜ் நிறுவனம் 

I T C ஹஜ் சாா்வீஸ் முலம் பதிவு செய்து, கடந்த 8ம் தேதி கொச்சி விமான நிலையத்தில் இருந்து இவரும் தன் மனைவி முஹ்ஷினா பேகம் வயது 28 இருவா்களுக்கும் மக்காவுக்கு பயணம் செய்து, நல்ல முறையில் முதல் உம்ராவை முடித்து விட்டு ஹரம் எதிாில் உள்ள ஹீல்டன் டவா் ஹோட்டலில் தங்கி இருந்து தினமும் தஃவாப், வணக்க வழிபாடுகளை செய்து வந்தாா். நேற்று கணவன்,மனைவியைும், தன் தங்கும் ஹீல்டன் டவா் இருந்து மகாிப் தொழுகைக்காக எதிாில் உள்ள 79 வது கேட் வழியாக தொழுகைக்கு வந்து இருவரும் ஆண்கள், பெண்கள் தனியாக உள்ள இடத்திற்க்கு சென்று விட்டாா்கள் பிறகு மகாிப் தொழுகை முடித்துவிட்டு குா்ஆன் ஒதிக்கொண்டு இருக்கும் போது, கிரேண் ஹரம் பகுதியில் விழுந்தது, சம்பவத்தில் இந்த பெண்மணி மரணம் அடைந்தாா்கள். சில மணி நேரத்தில் மரணம் அடைந்த பெண்மணியின் கணவருக்கு தகவல் தொிய மிகவும் பதட்டம் அடைந்த நிலையில் இருந்தாா், இவருடன் உடன் சென்ற மற்ற ஹஜ் பயணாளிகள் ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கிறாா்கள், இவா்களுக்கு முன்று குழந்தைகள் இதில் அயிஷா மாியம் 11 வயது பெண் மகள் , முஹம்மது அஜீம் 5 வயது மகன், முஹம்மது அன்சீப் 4 வயது மகன், இந்த தகவல் அறிந்த குடும்பத்தாா்கள், உறவினா்கள் , பொதுமக்கள் அவரது இல்லத்தில் வந்து கொண்டு துக்கம் விசாித்து கொள்கிறாா். பாலக்காடு , கல்மண்டம், மினா நகா் பகுதிகள் சோக காட்சியில் இருக்கிறது, இந்த பெண்மணியின் உடல் அடக்கம் இன்று அல்லது நாளை மக்காவில் உள்ள மைய்யவாடி அடக்கம் நடக்கும்.

1,076 total views, 9 views today

கணவரை கொலை செய்த மனைவி கைது- தகாத உறவால் விபரீதம்!

0
சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் ஜவஹர்லால்(வயது 45)- பீம்லால்(வயது 42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர், இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் போராப்பூர் ஆகும். 15 வருடங்களுக்கு முன்பே இங்கு குடும்பத்துடன் குடியேறி விட்டனர்.
பெயிண்டரான ஜவஹர்லால் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தார், இவரிடம் ராமபிரசாத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பீம்பாலுக்கும், ராமபிரசாத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது, இந்த விவகாரம் ஜவஹர்லாலுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.
கணவரின் பேச்சை கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
எனவே கணவரை கொலை செய்ய பீம்பாலும், ராமபிரசாத்தும் திட்டம் தீட்டினர்.
இதன்படி நேற்றிரவு 10.30 மணியளவில் மகள்களும், மகனும் சாப்பிட்டு விட்டு அவர்களது அறைகளுக்கு தூங்குவதற்காக சென்று விட்டனர். பின்னர் ஜவஹர்லால் தனது அறைக்கு சென்று தூங்கினார்.
அப்போது பீம்லால், கள்ளக்காதலன் ராம பிரசாத்துக்கு போன் செய்து வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ஜவஹர்லாலின் தலையில் சிமெண்டு கல்லை தூக்கி போட்டனர்.
இதில் அவரது மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் படுக்கை யிலேயே ஜவஹர்லால் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் எதுவும் தெரியாதது போன்று படுத்துறங்கிய பீம்பால், காலையில் எழுந்தவுடன் தனது கணவனை யாரோ கொலை செய்து விட்டதாக கூச்சல் போட்டு கதறி அழுதுள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெய சுப்பிரமணியன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப் பட்ட ஜவகர்லாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜவஹர்லால் கொலை செய்யப் பட்டு கிடந்த அறையில் சோதனை செய்து பார்த்ததில் சிமெண்டு கல்லின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தனர்.
இதனைதொடர்ந்து பீம்பாலிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பீம்பாலை கைது செய்த பொலிசார், தப்பியோடிய ராமபிரசாத்தை தேடி வருகின்றனர்.
– See more at: http://www.seithiveechu.com/5362#sthash.rbjEYobI.dpuf

1,169 total views, 6 views today

அரசு ஆஸ்பத்திரியில் அனாதையாக விட்டுச்சென்ற பெண் குழந்தை சாவு – போலி முகவரி கொடுத்த பெண் யார்?

0
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 9–ந் தேதி இரவு 9.50 மணிக்கு பிறந்து சில மணி நேரமே ஆன கைக்குழந்தையுடன் ஒரு பெண் வந்தார்.
அவர் அங்கிருந்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் எனது பெயர் கவிதா. சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் கூறினார்கள். எனவே இங்கு வந்தேன் என்றார்.
அதைத்தொடர்ந்து அந்த பெண்ணை குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை அனுமதித்தனர். கவிதாவும் அதே வார்டில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் 10–ந் தேதி காலை கவிதா திடீரென்று மாயமானாள். கழிவறைக்கு சென்றிருப்பார் என நினைத்தனர். வெகு நேரமாகியும் கவிதா வரவில்லை. ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் பலன் இல்லை. எனவே அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிங்காநல்லூர் போலீசை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரித்த போது தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கவிதாவின் குழந்தை நேற்று இரவு பரிதாபமாக இறந்தது. கவிதா ஆஸ்பத்திரியில் சேரும் போது முகவரி கொடுத்திருந்தார். அது போலி என தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் கொடுத்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் அந்த பெண்ணின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

6,075 total views, 6 views today

கோவையில் வனத்துறை விளையாட்டு போட்டி: அமைச்சர் ஆனந்தன் தொடங்கி வைத்தார்

0
கோவையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டு திடலில் மாநில வனத்துறையின் 22–வது விளையாட்டு போட்டி தொடக்க விழா இன்று நடைபெற்றது. போட்டிகள் வருகிற 13–ந் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ்வர்மா தலைமை தாங்கினார்.
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டிகளை தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் வனத்துறை சார்பில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரண நிதியையும் வழங்கினார். அதைத்தொடர்ந்து கோவை வனக்கோட்டத்தில் மனிதர்கள்– வன விலங்குகள் மோதலை தடுக்கும் திட்டத்தை (திட்டம் களிறு) தொடங்கி வைத்து அதற்கான லோகோவையும் வெளியிட்டார்.
அதன் பின்னர் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசும் போது தமிழகத்தில் 17 சதவீதமாக இருந்த வனப்பரப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 18.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வனத்துறையை மேம்படுத்த மேலும் பல கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இது வருங்கால சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும். உயிர் பன்மை பாதுகாப்பு திட்டம் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் நிலங்களில் மரம் நடுதல் மூலமாக 2,978 கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றார்.
விளையாட்டுப்போட்டி தொடக்க விழாவில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மெல்கானி, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மேயர் கணபதி ராஜ்குமார். நாகராஜன் எம்.பி., மலரவன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட வன அலுவலர் செந்தில் குமார், மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், நடராஜ், குழு தலைவர் அம்மன் அர்ஜூனன், போனஸ் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி, வேலூர் உள்பட 12 வன சரகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

2,196 total views, 9 views today

Registration

Forgotten Password?

Close