Home Blog Page 1092

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? முக்கிய அறிவிப்பை நாசா இந்த வாரம் அறிவிக்கிறது

0

இது போல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.  அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா.

இதற்காக 4 வகையான விண்வெளி திட்டங்களை கையில் எடுத்துள்ள நாசா முதற்கட்டமாக, வரும் 2018-க்குள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் மெகா ராக்கெட்டை தற்போது உருவாக்கி வருகிறது. முதல் திட்டத்தை 2029-லும், 2-வது திட்டத்தை 2032-லும், 3-வது திட்டத்தை 2033-ம் ஆண்டிலும், கடைசி திட்டத்தை 2039-வது ஆண்டிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, 2039-க்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க நாசா முயற்சித்து வருகிறது. எனினும், இதற்கான செலவு விபரங்களை தெரிவிக்க நாசா மறுத்துவிட்டது.

சமீபத்தில் நாசா விண் வெளி ஆய்வு மையம் அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் செவ்வாய் கிரகத்தில்  தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக கூறியது. இதன் மூலம் அங்கு மனிதன் வாழ தகுந்த சூழல்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாசா மீண்டும் இந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்து மேலும் பல் தகவல்களை வெளியிட திட்டமிட்டு உள்ளது.  செவ்வாயின் அடர்த்தியான வளிமண்டல  ஆய்வில் சிக்கிய முக்கிய கண்டுபிடிப்பை அறிவிக்க உள்ளது.  இது 10 மாத ஆய்வின் முடிவாகும். செவ்வாயில் உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான வாழ்வாதாரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த 2013 நவம்பர் 18 ஆம் தேதி மேவன் விண்கலத்தை அனுப்பியது.

வெற்றிகரமாக தனது பயணத்தை  நிறைவு செய்துள்ள அந்த விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை அடைந்து ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் குறித்து முதலில் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. இதன் முடிவுகள் குறித்து இந்த  கூட்டத்தில் அறிவிக்கலாம் என கூற்ப்படுகிறது.

1,049 total views, 6 views today

துருக்கி பாராளுமன்ற தேர்தலில் அதிபர் எர்டோகன் கட்சிக்கு அமோக வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது

0

அங்காரா,

துருக்கி பாராளுமன்ற தேர்தலில் அதிபர் எர்டோகன் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரது கட்சி 316 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

பாராளுமன்றம் கலைப்பு

2003–ம் ஆண்டு முதல் துருக்கி பிரதமராக பதவி வகித்து வந்த தாயீப் எர்டோகன் கடந்த ஆண்டு மக்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார். இதனால் அவரது நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின்(ஏ.கே.பி) தலைவர் அகமது டவுடோக்லு பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி தனிப் பெரும்பான்மையை இழந்தது. மேலும், கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியும் தோல்வி அடைந்ததால் 550 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 1–ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி, பிரதான எதிர்க்கட்சியான மக்கள் குடியரசு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய இயக்க கட்சி ஆகியவை போட்டியிட்டன.

ஆட்சியை கைப்பற்றியது

நேற்று முன்தினம் துருக்கி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், மாலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில், ஆரம்பம் முதலே அதிபர் எர்டோகன் கட்சி முன்னிலை பெற்றது. பதிவான அனைத்து ஓட்டுகளும் எண்ணி முடிக்கப்பட்டபோது அவரது கட்சிக்கு 49.4 சதவீதம் வாக்குகள் கிடைத்தன.

மேலும், அக்கட்சி 316 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. துருக்கியில் ஆட்சி அமைக்க 276 இடங்கள் போதுமானது என்ற நிலையில் எர்டோகன் கட்சி அதைவிட கூடுதலாக 40 இடங்களை கைப்பற்றியது. மக்கள் குடியரசு கட்சிக்கு 134 இடங்களும், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 59 தொகுதிகளும், தேசிய இயக்க கட்சிக்கு 41 இடங்களும் கிடைத்தன.

கருத்து கணிப்பை மீறி…

கடந்த மாதம் 10–ந்தேதி தலைநகர் அங்காராவில் நடந்த அமைதி ஊர்வலத்தில் 2 இடங்களில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 100–க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்தனர்.

இதன் காரணமாக, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் நீதி மற்றும் வளர்ச்சி கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறப்பட்டது. எனினும், யாரும் எதிர்பாராத வகையில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அக்கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது.

மக்களுக்கு வெற்றி

தேர்தல் முடிவுகள் குறித்து அதிபர் எர்டோகன் கூறுகையில், ‘இந்த தேர்தல் மூலம் ஸ்திரத்தன்மையை மக்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டார்.

நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் தலைவரும், பிரதமருமான அகமது டவுடோக்லு ‘‘இது எங்களின் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதிபர் எர்டோகன் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்திருப்பதால் மேற்கத்திய நாடுகளின் தொழில் முதலீடுகள் மீண்டும் துருக்கியில் குவியும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

945 total views, 9 views today

ஒரே மாதத்தில் 21.8 லட்சம் அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்தனர்

0

2.18  லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ஐரோப்பா நாட்டிற்குள் படகு மூலம் கடல் வழியாக தஞ்சம் அடைந்து உள்ளனர். இது 2014 ஆம் ஆண்டு வரை தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு சமமானதாகும்.  இந்த அகதிகளில் பெரும்பாலானவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் கூறும் போது, குளிர்காலத்தில் கூட அபாயகரமான பயணம் செய்து  ஐரோப்பாவிற்கு பயணம் செய்கின்றனர் என கூறினார்.

திங்களன்று 4 அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்கினர்.  6 அகதிகளை காணவில்லை.

7 லட்சம்  அகதிகள் இந்த வருடம் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் கூறி உள்ளது.

985 total views, 6 views today

இந்திய-நேபாள எல்லையில் மாதேசி சமூகத்தினரின் வன்முறை நீடிப்பு

0
காட்மாண்டு,
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய எல்லையோரம் வசித்து வரும் மாதேசிகள் தீவிர போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாதேசிகளின் போராட்டத்தால் இந்திய–நேபாள எல்லை மூடப்பட்டு உள்ளதுடன், எல்லைப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்திய எல்லைப்பகுதியான பிர்கஞ்ச்–ரக்சால் அருகே நேற்று மாதேசிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். உடனே போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பீகாரை சேர்ந்த ஆஷிஷ் குமார் ராம் (வயது 24) என்ற வாலிபர் உயிரிழந்தார்.
இந்நிலையில் நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிராக, இந்திய வம்சாவளி மாதேசி சமூகத்தினர், இந்திய-நேபாள எல்லையில் சரக்கு போக்குவரத்தை தடுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும் போராட்டக்காரர்கள், எல்லையில் பிர்குஞ்ச் என்ற இடம் அருகே, போக்குவரத்தை தடுக்கும் வகையில், டயர்களை தீயிட்டு எரித்தனர்

945 total views, 6 views today

உலகிலேயே முதல்முறையாக பிரமோஸ் ஏவுகணை இந்திய போர் விமானங்களில் இணைக்கப்படுகிறது; ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் தகவல்

0

இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணை, பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டு வருகின்றன. தொடர் வெற்றிகளால், இந்திய ராணுவத்தில் தரைப்படை மற்றும் கடற்படையில் பிரமோஸ் ஏவுகணைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

290 கிலோ மீட்டர் தூரம் வரை, சுமார் 300 கிலோ அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை வாய்ந்த பிரமோஸ் ஏவுகணைகள் ஒலியை விட அதிவேகத்தில் செல்லும் சிறப்புடையதாகும். இந்நிலையில், சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை, அரபிக் கடற்பகுதியில் இருந்து வெற்றிக்கரமாக இரு நாட்களுக்கு முன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, துல்லியமாக சென்று இலக்கினை தாக்கியது. இத்துடன், பிரமோஸ் ஏவுகணை 49-முறை சோதனை நடத்தியுள்ளது.

இந்நிலையில், பிரமோஸ் ஏவுகணையை விமானங்களில் இணைக்கும் வகையில் முதல்முறையாக சுகோய் 30 போர் விமானத்தை மாற்றி அமைத்து உருவாக்கியிருந்தது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம். விரைவில் இந்திய போர் விமானங்களில் அதிவேக சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை இணைக்க இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 ஆயிரம் கிலோ எடையுடைய ஏவுகணையை உலகிலேயே முதல்முறையாக போர்விமானங்களில் இணைப்பது இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

921 total views, 6 views today

க்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல ஜனாதிபதியை சந்தித்த பின் சோனியா காந்தி பேட்டி

0
முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்த பின் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஜனாதிபதியிடம் மனு அளித்த பின் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முக்கிய விவகாரங்களில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.இது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல.காங்கிரஸ் கட்சி முழு உத்வேகத்துடன் போராடும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
அதனை தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், ஜனாதிபதி, மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் நாட்டில் நிலவி வரும் சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு எதிர்த்து கருத்து கூறியுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.

900 total views, 6 views today

மக்கள் நலக் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? விஜயகாந்த், ஜி.கே.வாசனுக்கு கூட்டணியில் சேர அழைப்பு: வைகோ பேட்டி

0

மக்கள் நலக் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து வைகோ பேட்டியளித்தார்.

கூட்டணி அறிவிப்பு

மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தை அரசியல் கூட்டணியாக முன்னெடுத்து செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாலாஜி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ரா.முத்தரசன் ஆகியோர் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தை ‘மக்கள் நல கூட்டணியாக’ அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து அக்கூட்டணியின் குறைந்தபட்ச வரைவு செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், ஊழல் ஒழிப்பு, சாதி வெறி சக்திகளை எதிர்த்தல், நதிநீர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை, மதுவிலக்கு, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 24 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்று திருப்பம்

இதனைத்தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தை, மக்கள் நலக் கூட்டணியாக அறிவித்துள்ள இந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தும் நாள் ஆகும். சமூக அரசியல், பொருளாதார நிகழ்வுகள் என அடுத்து மேற்கொள்ளவேண்டியவை குறித்து விவரித்து, குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை தயாரித்துள்ளோம்.

இதுதொடர்பான விளக்க பொதுக்கூட்டம் வருகிற 25-ந் தேதி கோவையில் நடைபெறும். விலைவாசி உயர்வை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஊழலை ஒழிப்பதுதான் எங்களின் முதன்மையான நோக்கம். ஊழலில் புரையோடிய தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவே நாங்கள் களம் இறங்கியிருக்கிறோம்.

முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?

தமிழகத்தில் 35 சதவீதம் பேர் தான் அரசியல் கட்சியில் இருக்கிறார்கள். மீதம் உள்ள 65 சதவீதம் பேர் நடுநிலையாளர்கள். இவர்கள் எங்கள் கூட்டணி ஆட்சி அமைய மிகவும் ஆவலாக உள்ளனர். தமிழக மக்கள் நலன் காக்கும் எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வை தவிர்த்து யார் வேண்டும் என்றாலும் வரலாம். வரவேற்க தயாராக இருக்கிறோம்.

ஜி.கே.வாசன் (த.மா.கா.), விஜயகாந்த் (தே.மு.தி.க.) எங்கள் கூட்டணியில் சேரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் கூட்டணியில் மேலும் கட்சியினர் வந்து சேருவார்கள். ஆகையால் முதல்-அமைச்சர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம். எங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளோம். தமிழக சட்டமன்ற தேர்தலில் உறுதியாக ஜெயித்து, நாங்கள் ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினர்.

பேட்டியின்போது ஜி.ராமகிருஷ்ணன், ரா.முத்தரசன் மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1,105 total views, 12 views today

ஆந்திர சிறைகளில் உள்ள 172 தமிழர்கள் ஜாமினில் விடுதலை: தமிழக அரசு தகவல்

0

சென்னை: ஆந்திர சிறைகளில் உள்ள 172 தமிழர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பல தமிழர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவ்வாறு ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் விவரங்களை ஆந்திர காவல்துறையினரிடமிருந்து பெறுமாறு காவல் துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

869 total views, 6 views today

Registration

Forgotten Password?

Close