CAA,NPR,NRCக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திருவாரூரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது

0
0

NPR , CAA , NRC க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கொரானா அச்சுருத்தலைமீறி திருவாரூர் தெற்குவீதியில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் நடைபெற்றது,கொரானாவை விட குடியுரிமைச்சட்டம் மிக கொடூரமானது என மாநிலசெயலாளர் கோவைஅப்பாஸ் பேட்டிமத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் பல கட்டபோராட்டங்களை நடத்திவந்த நிலையில் திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் இன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது ,

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக கொரானாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை ஒத்திவைத்த நிலையில் ,தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் அறிவித்தபடியே போராட்டத்தை இன்று தெற்குவீதியில் நடத்தினர் .,

குடியுரிமைச்சட்டத்தால் அகதி ஆவதைவிட கொரானா வைரஸால் சாவதேமேல் , குடியுரிமை திருத்தச்சட்டம் ஆர்பாட்டதில் போடும் வழக்குகளில் அனைவரும் சிறைச்சென்று சிறையை நிரப்புவோம்
என கோஷமிட்டு ஆர்பாட்டம்செய்தனர் .,இந்த ஆர்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் , ஆண்கள் ,குழந்தைகள் கலந்துகொண்டு தமிழக சட்டமன்றத்தில் NPR , CAA , NRC க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி கைகளில் தேசியக்கொடியை ஏந்தி ஆர்பாட்டம் செய்தனர் .,

இந்த ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .,பேட்டி: கோவை அப்பாஸ்
மாநிலசெயலாளர்

348 total views, 3 views today