திருச்சி மக்கள் அதிகாரம் சார்பாக –மத்திய அமைச்சரையும், மாநில அரசையும் கண்டித்து மகஇகவினா் கண்டன ஆர்பாட்டம்


ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை 1 வாரத்திற்க்கு பிறகு ஆய்வு செய்ய குழு அமைத்த மாநில அரசை கண்டித்து மகஇகவினா் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

கடந்த வாரங்களில் தமிழகத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி கன்னியாகுமரி உள்ளிட்ட பல கடற்கரை கிராமங்களை சூரையாடியது. அதிலும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற ஆயிரகணக்கான மீனவா்கள் கரை திரும்பாத நிலையில் மத்திய அரசானது 97 மீனவா்கள் மட்டுமே கடலுக்கு போனதாக ஒரு பொய்யான தகவலை தந்துள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் குற்றசாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் தவறான தகவலை கூறுவதாகவும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 1 வாரத்திற்க்கு பிறகு ககன்சிங் பேடி தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆர்கே.நகா் தொகுதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழியை மட்டுமே யோசிக்கும் இந்த அரசை பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளனா். தமிழகத்தில் மீனவர்களை காப்பாற்ற தவறிய அரசை கண்டித்து மகஇகவினா் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட செய்தியாளர் பிரபாகரன்

49 total views, 2 views today