அயல் தேசத்தில் சாதனை தமிழர் நடத்தும் தொழிலாளர் தின விழா

அயல் தேசத்தில் சாதனை தமிழர் நடத்தும் தொழிலாளர் தின விழா

தமிழகம் திருவாரூர் முத்துபேட்டையை சேர்ந்த ஹைதர் அலி அவர்கள்

ஏழை மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர்

வெளி நாடு செல்ல முடிவெடுத்து கத்தார் சென்றார்

பின்பு குவைத்திற்கு
வீட்டு டிரைவர் பணிக்காக வந்து மிகவு கஷ்டப்பட்டார்

இது தான் நம் வாழ்க்கையா என யோசித்த அவர் ஏதேனும் தொழில் தொடங்கி முன்னேறிட முடிவெடுத்தார்

அதன் முதற்கட்டமாக கார்கோவை கையில் எடுத்தார்

ஒவ்வொருவரிடமும் நேரில் சென்று பொருட்களை பெற்று மற்றொரு நிறுவனத்தின் மூலம் அனுப்பி மக்களின் நம்பிக்கைக்குரியவர் ஆனார்

அதன் பின்பு நாமே ஏன் கார்கோ ஆரம்பிக்க கூடாது என நினைத்து TVS CORGO என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்

அதன் பின் மக்களின் மகத்தான ஆதரவில் TRAVELS ஆரபித்தார்

அதுமட்டுமின்றி
நிறுவனங்கள் குவைத்தை தாண்டி கத்தார், துபாய், சவூதி, மலேசியா என விரிவடைந்தது

இந்த நிறுவனத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்

தான் பட்ட கஷ்டம் பிறர் பட கூடாது என நினைத்து வருடம் தோறும் தொழிலாளர்களை ஊக்கம் படுத்தும் விதமாக போனஸ் கொடுக்கும் நிகழ்வை விழாவாக நடத்தி சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு தங்கம்,.பணம் என கொடுத்து மகிழ்வார்

அதன் முயற்சியாக 17 ஆண்டு நிகழ்வை தற்போது 11.11.2017 அன்று நடத்தி காட்டினார்

இதை போன்ற நிகழ்வுகள் வேறு கம்பெனியில் நடக்கிறதா என்றால் கடினமே என சொல்லலாம்

இவரின் வளர்ச்சியின் முக்கிய கட்டமாக துபாய் அமெரிக்க நிறுவனம் ஒன்று டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது

முத்தாய்ப்பாய் சொன்னால் இவர் குவைத் வாழ் தமிழர்களின் செல்ல பிள்ளை

இவரின் சேவை பணியை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பல பட்டங்கள் கொடுத்து அழகு சேர்த்து உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

அயல் தேசத்தில் இந்த தமிழரின் வளர்ச்சி என்பது சாதாரணது அல்ல

இவரை தொழில் ரீதியாக வீழ்த்திட பல முனைகளில் எதிரிகள் துரோகிகள் அனைத்தையும் தாண்டி இன்று வளர்ச்சி உலகம் முழுவதும் பரவி வருகிறது

அயல் தேசத்தின் இந்த சாதனை தமிழரை நாமும் வாழ்த்துவோமே

107 total views, 2 views today