அமெரிக்காவில் இந்தியத் தூதரங்கள் முன் போராட்டம்

இன்று, சனிக்கிழமை, செப்டம்பர் 16, வாசிங்டன் டி.சி நகரத்திலும் , ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 17 சிகாகோ, நியூயார்க், மற்றும் சான்பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களிலும் மறைந்த அனிதாவிற்காக நீதி கேட்டும் , நீட் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தியும், கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் அமெரிக்க வாழ் தமிழர்கள் இந்தியத் தூதரங்கள் முன் போராட்டம் நடத்த உள்ளனர் . அதைத் தொடர்ந்து தூதரக மேலதிகாரிகளைக் கண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளனர் .

இந்தப் போராட்டங்களைப் போலவே அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் மட்டுமல்லாது, உலகின் மற்ற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இந்தியத் தூதரங்கள் முன் நீட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தால் இந்தியாவின் மீது மிகப் பெரிய அழுத்தம் தரும் என்பதில் அய்யமில்லை. ஆகவே, உலகத் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று அமெரிக்க வாழ் தமிழர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

456 total views, 2 views today