74வது அகில இந்திய textiles கருத்தரங்கம் மற்றும் ஜவுளி தொழில்துறை விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கோவையில் இந்திய ஜவுளி சங்கம் தென்னிந்திய கிளை நடத்தும் 74வது அகில இந்திய textiles கருத்தரங்கம் மற்றும் ஜவுளி தொழில்துறை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜவுளித்துறை மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் சங்கங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விழாவில் தென்னிந்திய கிளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பிரிமியர் மில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜெகதீஷ் சந்திரன் அவர்களுக்கும் அதே போல் தொழிலகத்தின் சிறப்பான செயல்பாடுகள் விருதை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு ஆகிய இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராமலிங்க குடும்பத்தின் தலைவர் டாக்டர் dr தினகரன் தியாகராஜர் வில் நிர்வாக இயக்குனர் கருமுத்து கண்ணன் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் சங்கத்தின் தலைவர் ஏ பி அப்புகுட்டி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் இந்திய தொழில் கூட்டமைப்பின் துணைத்தலைவர் டி ராஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதுபோல் வெளிநாடுகளில் இருந்து 50 பிரதிநிதிகளும் இந்திய அளவில் 500 க்கும் மேற்பட்ட மில் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

775 total views, 6 views today

Registration

Forgotten Password?

Close