5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர் என்றும், அதன் பிறகு தேவைப்பட்டால் மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், சாலை மேம்பாட்டுப்பணிகள் குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை போக்க காலை, மாலை உடற்பயிற்சி, ஆங்கிலத்தில் பேசும் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி, தேர்வு நேரம் 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.

328 total views, 3 views today