கோவையில் இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில், ஸ்டைல் பஜார் கண்காட்சி கோவையில் துவக்கம்

கோவையில் இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில், ஸ்டைல் பஜார் கண்காட்சி கோவையில் துவக்கம்

இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து வரும் தலைச்சிறந்த ஆபரணங்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்று, தங்களின் பொருள்களை காட்சிப்படுத்துகின்றனர்.

இந்தக் கண்காட்சியில் ஸ்டைலான டிசைன் நகைகளும், நவநாகரிக ஆடைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் வீட்டு அலங்காரப் பொருள்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. தரமான பொருள்கள், மிகவும் குறைந்த விலையில் இந்தக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதே இந்தக் கண்காட்சியின் சிறப்பு.

இதைத் தவிர, வளரும் ஆடை மற்றும் ஆபரண வடிவமைப்பாளர்கள் தங்களின் பொருள்களைக் காட்சிப்படுத்த இந்தக் கண்காட்சி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதனால் உலகில் அளவில் எங்கும் காணக்கிடைக்காத பல டிசைன் ஆபரணங்களை இந்தக் கண்காட்சியில் வாங்கலாம்.

இந்தக் கண்காட்சியில் ஆடைகள், சாரிகள், லேக்கீன்ஸ் மற்றும் ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதைத் தவிர, வீடுகளை அலங்கரிக்கும் பொருள்களும் இடம்பெற உள்ளன.

கோல்டு வீவர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளர் நிதின் மல்கோத்ரா, அகமதாபாத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளர் எலிக்ன்ஸ், வாணி ஸ்ரீ, பிரீத்தி மெஹ்தா, பூனம் ஜெய்ஸ்வால், கொல்கத்தாவைச் சேர்ந்த பெரிஸ், வேடந்தம் ஆகியோர் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். மேலும், இந்தூர், காஷ்மீர் கைத்தறிகள் கண்காட்சியில்காட்சிப்படுத்தப்படஉள்ளன. இதைத் தவிர, சாரிஸ், பட்டுகள், காலணிகள், அலங்கார கைப்பைகள், வேலைப்பாடு செய்யப்பட்ட கற்கள் பதிக்கப்படஆபரணங்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.

இந்த கண்காட்சியை மகளிர் அமைப்பின் தேசிய துணை தலைவர் நிதி குப்தா மற்றும் மிஸ்சர்ஸ் இந்தியா எர்த் காயத்ரி நடராஜன் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.

இந்தக் கண்காட்சி ஜூலை 10 மற்றும் 11ம் தேதிகளில் ரேஸ்கோர்ஸ் தாஜ் – ஹோட்டலில் நடைபெறுகிறது.

78 total views, 15 views today

Top

Registration

Forgotten Password?

Close