*இரவுச் செய்திகள்*

*சென்னை:*

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். சமீப காலமாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வந்த இவரை இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதனை அடுத்து அவர் மிக உற்சாகமானார். இந்நிலையில் அவர் சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை ஒட்டி டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். நான் வந்துட்டேன்னு சொல்லு! தமிழின் அன்பு உடம்பிறப்பெல்லாம் எப்படி இருக்கீக மக்கா? உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில வீரமா; காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல ஐபிஎல் விளாடப் போறத நெனச்சாலே மெர்சலாகுது;என்றும் தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!! என்றும் ட்விட் போட்டு தமிழக மக்களை மெர்சலாக்கி உள்ளார்.

*சென்னை:*

ஜெ. சிகிச்சையின்போது சிசிடிவி அணைக்கப்பட்டது பற்றி அப்போலோ நிர்வாகம்தான் பதிலளிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சிசிடிவி கேமரா விவகாரத்தில் நாங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

*பெங்களூரு:*

காவிரி விவகாரத்தில் உச்ச நீத்திமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்யப்போவது இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இன்று கர்நாடக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு திட்டத்தை வகுத்து நீர் விடவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மத்திய அரசிடம் கர்நாடக அரசு அளித்துள்ளது.

*டெல்லி:*

714 ரயில்நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன. எல்இடி விளக்குகளை அமைப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

*சென்னை:*

தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் உடன் நடந்த பேச்சுக்கு பிறகு தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். கேளிக்கை வரியை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

*நெல்லை:*

நெல்லை மாவட்டம் நான்குனேரியில் முத்துராமலிங்கம் என்பவரது வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*சென்னை:*

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் என்றும் கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் எனவும் டிவிட்டரில் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

*மும்பை:*

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முகமது ஷமிக்கு தடை இல்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. தம்மை கொல்ல முயன்றதாக முகமது ஷமி மீது அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

*சென்னை:*

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தண்ணீர் பற்றாக்குறையை போக்க மழை நீரை சேமிக்க வேண்டும் என்றும், மழை பெய்ய மரங்களை வளர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

*ஐதராபாத்:*

8 வங்கிகளில் ரூ.1394.43 கோடி மோசடி செய்த நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனமான டோட்டம் இன்ஃப்ரா ஸ்டிரக்டர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சலாலீத், கவிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.13 கோடி கடன் வழங்கிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

*பீகார்:*

பீகார் மாநிலத்தில் உள்ள காயா ரயில் நிலையத்தில் உயிருள்ள 25 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்து கடத்தல்காரர்கள் தப்பியோடிவிட்டனர்.

*குமரி:*

ஸ்ரீராமதாச மிஷன் ரத யாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணறு பகுதிக்கு வந்தடைந்தது. கே.டி.சி நகர் நான்கு வழிச்சாலை வழியாக ரத யாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தது.

*புதுடெல்லி:*

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஎப்ஐ சட்டவிரோத ஆயுதப்பயிற்சியை மேற்கொள்கிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்துவக்கு பாபா ராம்தேவ் விளக்கமளித்துள்ளார். நான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகிறேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தீவிரவாதிகளோ அல்லது நக்சலைட்டுகளோ இல்லை, அவர்கள் தேசியவாத அமைப்பினர். எனவே அவர்கள் ஒருபோதும் நாட்டிற்கு எதிராக எந்தவொரு செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

*பெங்களூரு:*

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக மாநில எம்பிக்கள் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக்கட்சி எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர். காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

*சென்னை:*

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் உடன் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கேளிக்கை வரி குறைப்பு உள்ளிட்டவை குறித்து நிரஞ்சன் மார்ட்டியுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் ‘அபிராமி’ ராமநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

*சென்னை:*

பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்கு எதிரான வழக்கில் காவல்துறை பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலவாக்கம் போலீசார் பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சாலவாக்கம் காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி இல்லத்தின் நிர்வாகி தாமஸ் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

*புதுடெல்லி:*

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் 215 கிராம் எடையுள்ள 2 தங்க சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 2 பேரை கைது செய்த சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

*சென்னை:*

சென்னை சிபிஐ அதிகாரிகளுக்கு டெல்லி உயர் அதிகாரிகள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர். கனிஷ்க் நிறுவன வங்கி மோசடி குறித்து 3 மாதங்களுக்கு முன்பே புகார் வந்தும்கூட நடவடிக்கை எடுக்காததால் சென்னை அதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கனிஷ்க் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் சென்னை சிபிஐ அதிகாரிகளை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*சென்னை:*

சென்னையில் உள்ள கனிஷ்க் கோல்டு நிறுவன அதிபர் பூபேஷ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் பூபேஷ் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று ரூ.824 கோடி மோசடி செய்ததாக கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

*ஸ்ரீநகர்:*

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 வீரர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் மேலும் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். 3 ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உட்பட மொத்தம் 5 வீரர்கள் இத்தாக்குலில் வீர மரணம் அடைந்துள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த 3 ராணுவ வீரர்களின் உடல்களுக்கு ஸ்ரீநகரில் சக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

*புதுச்சேரி:*

அரசியல் சாசன படி நியமனம் என்பதை தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பேட்டியளித்துள்ளார். மத்திய அரசின் அனுமதியோடுதான் 3 பேரும் எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

335 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close