கும்பகோணம் டவுன் மேலக்காவேரியில் தமிழ்நாடு முல்லீம் முன்னேற்றம் நகரம் சார்பில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஹலீலுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அப்துல் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.நகர செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார். முகம்மது காசிம், ரியாஸ் அகமது, ஜெகபர் சாதிக், அப்துல் அஜீஸ், ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா , மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் சரவண பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள் முகம்மது செல்லப்பா, ராஜ் முகம்மது, முகம்மது சலீம், புலவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாநில செயலாளர் கோவை ஜாஹிர் சிறப்புரை ஆற்றினார்.

மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் எழுச்சி உரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியை குவைத் மண்டல பொறுப்பாளர் ஷாஜகான் தொகுத்து வழங்கினார். இந்த எழுச்சி பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

 684 total views