142 ஆண்டுகளில் சந்தித்திராத வறட்சியை தமிழகம் இப்போது சந்தித்துள்ளது' தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி

0
0

142 ஆண்டுகளில் சந்தித்திராத வறட்சியை தமிழகம் இப்போது சந்தித்துள்ளது’ என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘142 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தமிழகம் இப்படியொரு வறட்சியை சந்திக்கிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 62 சதவிகிதம் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
இரண்டு பருவமழைகள் பொய்த்துவிட்டதால் இப்படிப்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளோம். நீரை சிக்கனமாக மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்யப் போகிறோம்.
மக்கள் அனைவரும் தண்ணீரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். வறட்சியைப் போக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. மழை வர வேண்டுமென்று மக்களைப் போல் நாங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

519 total views, 3 views today