நாளை ( ஜூன் 29) புள்ளியியல் தினத்தை முன்னிட்டு ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட உள்ளார்.

கல்கத்தாவில் 29.07.2018 அன்று பிரசண்ட சந்திர மகாலானோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) என்கிற விஞ்ஞானி பிறந்தார். இவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை ஆரம்பித்து பல்வேறு புள்ளி விவரங்களைச் சேகரித்தார். பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சித் துறைகளில் இவரின் பங்களிப்பு மிக பெரிதும் உதவியாக இருந்தது. எழுத்தறிவு, வேலை வாய்ப்பு, தொழிலாளர், வறுமை, குழந்தைகள் என பல புள்ளி விவரங்களை சேகரித்தார்.அப்போது இவர் பிறந்த தினமான ஜூன் 29 -ஐ தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாட மத்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு அறிவித்தது.

இந்த ஆண்டு நாளை ( ஜூன் 29) இந்தியா முழுவதும் புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட உள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:-

புள்ளிவிவர மேதை மெஹலநோபிஸின் 125ஆவது பிறந்த தினம் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாளை வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறை அமைச்சகம் சார்பில் நடக்கவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் புள்ளியியல் தின நினைவாக ரூ.125 நாணயம், ரூ.5 புதிய நாணயம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிடவுள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது…!

மீடியா 7 நேரலை செய்திகளுக்காக நேரலை செய்தியாளர் சென்னை அருண்

489 total views, 3 views today