10ஆம் வகுப்பு மாணவனுடன் பேராசிரியரின் மனைவிக்கு தவறான தொடர்பு:பெற்ற தாயே புகார்

புதுச்சேரி அருகே வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் பேராசிரியரின் மனைவி தனது மகனுடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாக தாயே குழந்தைகள் நலக்கமிட்டியில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் பேராசிரியரின் மனைவிக்கு தவறான தொடர்பு உள்ளதாக பெண் ஒருவர் குழந்தைகள் நலக்கமிட்டியில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வரும் ஒரு நபர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிக்கும் வீட்டின் உரிமையாளரின் மகனான 12 வயது மாணவனுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த மாணவனின் பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். மேலும அற்தப் பெண்ணையும் எச்சரித்து வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர். வேறு வீட்டிற்கு சென்ற பின்னரம் அந்தப் பெண் மாணவனுடன் வைத்துள்ள தொடர்பை தொடர்ந்து வருகிறார்.
குழந்தைகள் நலக்கமிட்டியில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய், புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் நலக்கமிட்டி தலைவர் வித்யா ராம்குமாரிடம் ஒரு புகார் தெரிவித்தார். அதில், “தனது மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கும், தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 34 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே தவறான தொடர்பாகி விட்டது.
தொடர்பை விடமறுக்கும் பெண்
அந்த பெண் தனது மகனுடன் ஆன தொடர்பை விடமறுக்கிறார். இதுபற்றி தெரியவந்து மகனை கண்டித்த போது அவன் என்னை மிரட்டுகிறான். எனவே எனது மகனுடன் தவறான பழக்கத்தை ஏற்படுத்தி அவனது மனநிலையை மாற்றி வைத்துள்ள அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்தப் புகாரில் பாதிக்கப்பட்ட தாய் தெரிவித்துள்ளார்.
பெற்ற தாயே புகார்
பெற்ற தாயே தன் மகன் மீது இப்படி ஒரு புகார் தெரிவித்து இருப்பதைக் கண்டு குழந்தைகள் நல அதிகாரிகள் அதிர்ச்சியடைனர். இருப்பினும் அதிகாரிகள் ரகசியமாக விசாரித்தனர். இதில், பேராசிரியரின் மனைவிக்கு மாணவனுடன் தவறான தொடர்பு இருப்பது உறுதியானது.
ஆறுதல் கூறிய பெண்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவனுக்கு தோல் மீது ஒருவித பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவனது நண்பர்கள் கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்து இருந்த அந்த மாணவனுக்கு அந்த பெண் ஆறுதல் கூறி வந்துள்ளார்.
தவறான தொடர்பான நட்பு
இந்த நட்பே நாளடைவில் அவர்களுக்குள் தவறான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுபற்றி தெரியவந்ததும் மாணவனை அவனது பெற்றோர் கண்டித்தனர்.
தொடர்பை கைவிடவில்லை
இதுமட்டுமின்றி அந்த பெண்ணையும் தங்களது வீட்டில் இருந்து காலி செய்ய வைத்துள்ளனர். வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தபோதிலும் அந்த மாணவனுடன் ஆன தொடர்பை அந்த பெண் கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இது சரிவராது என்று எண்ணிய மாணவனின் தாய், குழந்தைகள் நலக் கமிட்டியில் புகார் அளித்துள்ளார். குழந்தைகள் நலக் கமிட்டியினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

661 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close