தாராசுரம் கடைவீதியில்  குடந்தை மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65 வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இளைஞர் எழுச்சி  பொதுக்கூட்டத்திற்கு குடந்தை மேற்கு ஓன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.

 கோ.மணி, ஜெயபால், சரஸ்வதி அம்மாள்,அசோகன், காமராஜ், சரவணன், பாஸ்கர், கருணாநிதி, மோகன், செந்தில்குமார், முத்தை.செந்தில்குமார், இராதாகிருஷ்ணன், கலியமூர்த்தி, ஷாஜகான், தங்க.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா , மாவட்ட கழக செயலாளர் கல்யாணசுந்தரம், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக பேரூர் கழக செயலாளர் சாகுல்ஹமீது   நன்றியுரை நிகழ்த்தினார். இதில்  மாவட்ட பொருளாளர் சேக்தாவுது , ஒன்றிய செயலாளர்கள் இராமலிங்கம், கணேசன், தாமரைச்செல்வன், குடந்தை நகர செயலாளர் தமிழழகன், இராசாராமன், பாஸ்கர், கவிதாராம் மோகன்ராஜ் உட்பட கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்

 453 total views,  1 views today