ஹெல்மெட் ‘சோதனை’போலீஸ் அட்ராசிட்டி 3 மாத கர்ப்பிணி சாவு

ஹெல்மெட் ‘சோதனை’போலீஸ் அட்ராசிட்டி
3 மாத கர்ப்பிணி சாவு

திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ஹெல்மெட் சோதனையில் (07.03.2018) இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) இருசக்கர வாகனத்தில் வந்தனர். உஷா 3 மாத காப்பிணி. போலீசார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் ஏட்டு காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்தார். இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வாகனத்தை எட்டி உதைத்த ஏட்டு காமராஜ் தப்பியோடிவிட்டார்.

தலைமை மண்டல
செய்தியாளர்
கண்ணியப்பன் A N

2,358 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply