கோவை சின்னியம் பாளையம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்துறை சாதனையாளர்கள் கலந்து கொள்ளும் புதுமுக மாணவர்களுக்கான 14வது அறிமுகப் பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெக்னோஜென் இந்தியா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மோனிகா நாயுடு, பிரெஷ் டெஸ்க்நிறுவனத்தின் ப்ரோடெக்ட் தலைவர் கே. செந்தில், மோர்போனிசிஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜான் ஆலாக் டீக்ரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த துறையின் நிபுணர்களின் வழியாக அறிமுகப் பயிற்சி உரை வழங்கினர். இதில் பொறியியல் துறையில் இருக்கும் வாய்ப்புகள், கல்லூரி காலத்தில்நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள், சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டிய முயற்சிகள், மாணவர் மேம்பாட்டிறிகான கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதி, வாய்ப்புகள் குறித்து விரிவான விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு கல்லூரியைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் தங்கவேலு, இயக்குனர் தீபன் தங்கவேலு, செயலாளர் சீலன் தங்கவேலு, முதல்வர் பிரகாஷ் மற்றும் துறைதலைவர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

429 total views, 3 views today