இது முதலியார் சமுகத்து மக்கள் வீட்டில் செய்யப்படும் விசேஷமான உணவாகும்.

தேவையான பொருட்கள்
சிக்கன் 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 15 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
எலுமிச்சம்பழ சாறு 1 தேக்கரண்டி
மரச்செக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் ( பொடியாக நறுக்கியது)

மசாலா பொடி அரைக்க
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் 2
கொத்தமல்லி விதை 1/2 தேக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி
கசாகசா 1 மேஜைக்கரண்டி
பட்டை 1 இன்ச்
கிராம்பு 3
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
காஜ்சுபத்திரி பூ 1
ஜாதிக்காய் 1 சிட்டிகை
தேங்காய் துருவல் 3 மேஜைக்கரண்டி

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவிலான உப்புத்தூள்,இஞ்சி-பூண்டு விழுது 1/2 மேஜைக்கரண்டி, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு பிசிறி குறைந்தபட்சம் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

2. இப்பொழுது வடச்சட்டியில் எண்ணெய் விடாமல் மராட்டிய மொக்கு, காஜ்சுபத்திரி, மராட்டிய மொக்கு, ஜாதிக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் நன்றாக மணம் வரும் வரை வறுத்து ஆறவைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

4. பிறகு வறுத்த பொருட்களை நன்றாக ஆற வைத்து பிறகு இஞ்சி-பூண்டு விழுதையும் மற்றும் பச்சைமிளகாயையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

6. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் அதில் ஜாதிக்காய் தூள், அண்ணாச்சி மொக்கு, காஜ்சுபத்திரி பூ, மராட்டிய மொக்கு சேர்த்து நன்றாக 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

7. பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் வரமிளகாய் தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

8. இப்பொழுது அதில் ஊறவைத்தள்ள சிக்கனை சேர்த்து நன்கு 6 நிமிடங்கள் வரை வதக்கவும். அடிபிடிக்காமல் இருப்பதற்கு இடை இடையே கிளறி விடவும்.

9. அதில் 1 1/4 கப் சுடு தண்ணீர் விட்டு நன்றாக 6 நிமிடங்கள் வரை சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

10. சிக்கன் நன்றாக வெந்துவிட்டதா என்று உறுதிபடுத்தி கொள்ளவும், பின்பு உப்பு , காரம் சரி பார்த்து கொள்ளவும். பிறகு நமக்கு ஏற்றவாறு குழம்பின் கெட்டி தன்மையை பொறுத்து அடுப்பை அணைத்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

1,753 total views, 2 views today