வேப்பூர் மே -28

வேப்பூர் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் அனுமதியின்றி குடிநீர் எடுத்த 35 மின் மோட்டார்கள், 14 கை பம்புகள் பறிமுதல் செய்யபட்டன

கடலூர் மாவட்டம், மேமாத்தூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் பலபேர் தங்கள் வீடுகளில் மினி மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதாகவும் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் வந்தது

அதை தொடர்ந்து நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி, ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பழைய மேமாத்தூர் பகுதியில் வீடு வீடாக சோதனை செய்தனர்

சோதனையில் 35 வீடுகளில் பொருத்தபட்டிருந்த 35 மினி மோட்டார்களையும், 14 கை பம்புகளையும் பறிமுதல் செய்தனர் மேலும் அப்பகுதியில் 5 வீடுகளை பூட்டி சென்றதால் சோதனை செய்ய முடியவில்லை

வீட்டில் உள்ள குடிநீர் இணைப்புகளை சோதனை செய்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்த நல்லூர் பிடிஒ ஜெயக்குமாரை பொதுமக்கள் பாராட்டினார்கள்

இது குறித்து பிடிஒ ஜெயக்குமார் கூறும் போது இது போன்று பல கிராமங்களிலும் தொடர்ந்து சோதனை செய்யபடும் என்றும், தனி நபர்கள் பொருத்தியுள்ள மினி மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யபடும் என்று கூறினார்

செய்தியாளர் தெய்வ பாண்டியன்

375 total views, 3 views today