திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குங்கும்மா காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் இன்று காலை சுமார் 9 மணி முதல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர், நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் 100 முதல் 200 வரை அதிகமானது,

ஆனால் மக்களுக்கு பொருட்கள் வழங்காமல் நியாயவிலை கடை ஊழியர், மக்கள் கொளுத்தும் வெயிலில் நிற்பது கூட தெரியாமல் தனது கை பேசியில் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தது அங்கு இருந்த மக்களின் முகம் சுளிக்க வைத்துள்ளது,

காலை10 மணி முதல் 11 மணி வரை போனில் பேசிக்கொண்டு பொருட்கள் வழங்காமல் மக்களை கடும் வெயிலில் காக்கவைத்துள்ளார்,

மக்களும் கேட்க வழி இன்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பொருட்கள் வங்கி சென்றனர்,

இது போன்று அரசு ஊழியர்களின் மெத்தனபோக்கினால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் மட்டுமே , இது போன்று அரசு சம்பளம் வாங்கி கொண்டு எந்த வேலையையும் செய்யாத அதிகாரிகள் மேல் அரசு நடவடிக்கை எடுக்குமா ? என்பது மக்களின் ஏக்கம்.

யுவராஜ்
வேடசந்தூர் செய்தியாளர்

 1,049 total views