பீகாரில் கூட்டுறவு சொசைட்டி மூலம் வெங்காயம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால், அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணத்தினால் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தொட்டுள்ளது. இந்த நிலையில் பீகாரில் கூட்டுறவு சொசைட்டி மூலம் கிலோ 35 ரூபாய்க்கு நபர் ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் வெள்ளிக்கிழமை முதல் விற்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.

இதன்படி வெங்காய விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து கூட்டுறவு சொசைட்டி அங்காடிகளில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.

 249 total views,  2 views today