அந்தேரிப்பட்டி பஞ்சாயத்து திப்பம்பட்டி கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் சாமி நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
போச்சம்பள்ளி ஏ மத்தூர் அடுத்த அந்தேரிப்பட்டி பஞ்சாயத்து திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் கோவில் பூசாரி பொன்னுசாமி, இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் இரவு வேளைகளில் தங்கிகொள்வது வழக்கம், இந்நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புராமாக உள்ள பெருமாள் கோவில் பூசாரியான இவரும் இவரது தம்பி கோவிந்தசாமி என்பவரும் வருடத்திற்கு ஒருமுறை கோவில் விசேஷங்களுக்கு சாமி சிலைகள் மற்றும் நகைகள் கொண்டு சென்று பூஜை முடித்துவிட்டு மீண்டும் வீட்டில் கொண்டு வந்து வைப்பது வழக்கம். இந்த ஆண்டு பொன்னுசாமி வீட்டில் சாமி சிலைகள் மற்றும் நகைகள் வைக்கப்பட்டது.

இரவு விவசாய நிலத்தில் தூங்குவதர்க்காக வீட்டை பூட்டு போட்டுவிட்டு தனது மனைவியுடன் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட ஆசாமிகள் யாரும் வீட்டில் இல்லை என்பதை உறுதிசெய்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை உடைத்து அதிலிருந்த ஐம்பொன்னால் ஆன சாமி சிலைகள் மூன்றையும் தூக்கி வேறொரு அறையில் வீசிவிட்டு, சாமியின் 5 சவரன் தங்க நகைகள் மற்றும் எட்டு வெள்ளி காசுகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொன்னுசாமி இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஊத்தங்கரை டிஎஸ்பி அர்ஜுனன்,மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்டவர், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர் களும் கொள்ளை நடந்த இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்ட மிட்டு கொள்ளையை கொள்ளையர்கள் திட்டமிட்படி நடத்தி முடித்துள்ளனர். அவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 413 total views