விவசாயி தமிழரசன் தற்க்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் நிறுவன தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் கருணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் மகன் தமிழரசன் வயது 40 என்பவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் இரண்டாண்டுகளுக்கு முன் டிராக்டர் கடன் பெற்று நிலுவையில்லாமல் தவனை திரும்பசெலுத்தி வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதமாக சர்க்கரை ஆலை கரும்பு பணம் வழங்க காலதாமதமானாதால் 1 மாத தவனை நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி நேற்று முன்தினம் கோட்டக் மகேந்திரா நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் டிராக்டரை ஜப்தி செய்து எடுத்து சென்று விட்டனர். மன்றாடி பார்த்தும் தர மறுத்ததால் விவசாயி தமிழரசன் அவமானம் தாங்காமல் விஷம றிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது .

தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக அடக்கு முறையை கையால்வதும், அவமாபை்படுத்தும் விதமாக செயல்படுவதும், தவனை தொகையை முழுமையும் செலுத்தியவர்களிடம் வரம்பு மீறி வட்டி, அபராத வட்டி பல லட்சம் கேட்டு மிரட்டுவதும் , வாகனங்களின் உரிமங்களை வழங்க மறுப்பதும் இழிவாக பேசுவதும் தொடர்ந்த வண்ணமாக உள்ளது .

எனவே : தற்க்கொலை செய்து கொண்ட தமிழரசன் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் மெனவும் தற்கொலைக்கு காரனமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்

பழநிசுரேஷ்

மாவட்ட செய்தியாளர்.

108 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close