விவசாயிகளை ஒடுக்கும் மத்திய -மாநில அரசுகளை கண்டித்து அரயலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கையில் கருப்பு கொடி எந்தி கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், விவசாயிகளின் பம்புசெட்டு மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது ,வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாய சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக அரியலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களி
லுள்ள தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள் தூத்தூர் தங்க தர்மராஜன், செங்க முத்து ,மணியன், விசுவநாதன், செந்தில்குமார் ,சிபிஐ மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் அருணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 62 total views,  2 views today