விளையாடும் நகராட்சி வீணாகும் குடிநீர் விரக்தியில் பொது மக்கள்…..

விளையாடும் நகராட்சி வீணாகும் குடிநீர் விரக்தியில் மக்கள்…..

குன்னுாரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், சாலையோரத்தில் உள்ள, 15க்கும் மேற்பட்ட குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

குன்னுாரில், ரேலியா அணை, ஜிம்கானா, கரன்சி,’ஹைபீல்டு’ போன்ற தடுப்பணைகளில் இருந்து,30 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோடை காலத்தில் பயன்படுத்த, ரேலியா அணை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற தடுப்பணைகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால், பல இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்கிறது. இந்நிலையில், குன்னுார் வருவாய் துறையினர் குடியிருப்பு, ‘ஹேர்வுட்’ குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையோரங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி செல்கிறது. குறிப்பாக, ஐயப்பன் கோவில் அருகே சாலையோரங்களில், 15க்கும் மேற்பட்ட உடைந்த குழாய்களில் ‘ரப்பர் டியூப்’ கட்டப்பட்டுள்ளது. எனினும், 24 மணிநேரமும் குடிநீர் விணாகி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த24 மணி நேரமாக குன்னூர் லாரி நிறுத்தம் அருகில் தண்ணீர் பைப் உடைப்பெடுத்து தண்ணீர் ஓடைபோல் ஓடுகிறது பல இலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்கள்

இப்படி பட்ட அலட்சிய போக்கினால் குன்னூரில் தண்ணீர் தட்டுபாடு தொடர்வதால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்….

மீடியா7 செய்திக்காக
ஊட்டி வெங்கடேஷ்

915 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close