விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி வேப்பூரில் ஆர்பாட்டம். டைரக்டர் கெளதமன் பங்கேற்பு

விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கோரி வேப்பூரில் விழிப்புணர்வு ஆர்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்ககோரி விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தனவேல் தலைமை தாங்கினார்
ஆர்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் கார்மங்குடி வெங்கடேசன், நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கதிர்காமன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி,பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், தேமுதிக மாவட்ட பொருப்பாளர் ஆனந்தகோபால், முன்னாள் சேர்மன் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் கெளதமன் கலந்து கொண்டு விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரி விழிப்புணர்வு ஆர்பாட்ட உரையாற்றினார்
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறஞர்
பெரியசாமி, விசிக ஒன்றிய செயலாளர் சந்தோஷ், துணை செயலாளர் முத்துகருப்பன், ஒன்றிய அமைப்பாளர் அர்ச்சுணன், விவசாயி சங்கம் வேட்டக்குடி ராஜ்குமார், பா.ம.க.துணை செயலாளர் கோபி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தேமுதிக ஒன்றிய செயலாளர் சேகர் , திராவிட கழகம் வட்டார தலைவர் பழனிசாமி, உழவர் மன்ற தலைவர் சாமிகண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
செய்திக்காக அகிலன் மணி

590 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close