*விருத்தாசலத்தில் ,குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் ! ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு*!

கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் அடுத்த இருசாளக்குப்பம் கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்து அக்கிராம மக்கள் விருத்தாசலம் to ஆலடி செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்பு, அங்கு வந்த ஆலடி போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது , அங்கிருந்த பொதுமக்கள் …. ” கிராமத்திலுள்ள ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து குடிநீர் கிடைக்கவில்லையென்றும் ,குடிநீர் பற்றாக்குறையை போக்க ஊர் பொதுமக்கள் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் சரியாக குடிநீர் வழங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம் சாட்டினர் “அதன் பிறகு, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலிசார்… குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து அக்கிராம பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் .இச் சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது .

விருத்தாசலம் – செய்தியாளர். எஸ். ரிச்சட் வினோத் ஜெயக்குமார்

 463 total views