விமானத்தில் இருந்து எரிபொருள் கொட்டியதில் 17 பள்ளிக் குழந்தைகள் காயம்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில் விமானத்தின் எரிபொருள் கொட்டப்பட்டதால் 17 குழந்தைகள் காயமடைந்தனர்.கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம், வானில் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.இதனால் லாஜ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்ட விமானம், அவசரமாக தரையிறக்கும் பொருட்டு எடையை குறைக்க வானில் இருந்து எரிபொருட்களை கீழே கொட்டியதாக கூறப்படுகிறது. அந்த எரிபொருட்கள் பள்ளி ஒன்றின் மைதானத்தில் விழுந்ததில் அங்கிருந்த 17 குழந்தைகள் மற்றும் 9 பெரியோர் காயமடைந்தனர்.

396 total views, 3 views today