விநாயகர் சதுர்த்தியன்று 24 மணிநேரமும் அலுவலர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்: கலெக்டர்

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:–
கோவை மாவட்டத்தில் 17–ந்தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஊர்வலங்களின் போதும், சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கடந்த ஆண்டை போல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் அனுமதித்துள்ள கரையக்கூடிய சாயத்தை மட்டுமே பூசி இருக்க வேண்டும். களி மண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ்களில் சிலை செய்து வைத்து விற்பனை செய்ய கூடாது. இதை கண்காணித்து தேவையான நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலைகள் கரைக்கப்படும் குளங்களில் போதிய வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்க மின்வாரியமும், மாநகராட்சியும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே இந்த ஆண்டும் செல்ல வேண்டும்.
பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலர்கள் மேற்கண்ட நாட்களில் அந்தந்த பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இந்த விழா நடைபெற ஒருங்கிணைந்து சிறப்பான வகையில் செயல்பட வேண்டும். 
இவ்வாறு அவர் என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், பொள்ளாச்சி சப்–கலெக்டர் ரஷ்மிசித்தார்த்ஜகடே, மாநகர காவல்துறை துணை ஆணையர் ரம்யாபாரதி, கோவை வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, துணை ஆணையர் (கலால்) வெங்கடேசன், அனைத்து வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1,588 total views, 8 views today

Top

Registration

Forgotten Password?

Close