வாழ்நாள் அணி” – நெகிழ்ச்சி அடைந்த சச்சின்

0
0

வாழ்நாள் அணி” – நெகிழ்ச்சி அடைந்த சச்சின்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சக வீரர்களுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஷகீர் கான், ஹர்பஜன் சிங், யுசஃப் பதான், அஜித் அகர்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அத்துடன் அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளனர்.

அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ‘வாழ்நாள் அணி’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று யுவராஜ் சிங் தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து, ‘பழமை பொன் போன்றது’ என்றும், தங்கள் வயதை குறிக்கும் வகையில் ‘ரொம்ப பழைமை இல்லை’ என்று கூறியுள்ளார். இதேபோன்று ஹர்பஜன் சிங் கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

198 total views, 3 views today