வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட தமிழக ஆந்திரா எல்லைபகுதியில் அமைந்துள்ளது அண்ணாநகர். இப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் கூலி தொழிலார்கள் ஆவார். இவர்களுக்கு மின் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலசவச எரிவாயு இணைப்பு அனைத்தும் தமிழக அரசு சார்பில் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 17 வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் அதிகாரிகள் சமீபகாலமாகஅங்குள்ள 17 குடும்பங்களை சேர்ந்தவர்களை இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி உடனடியாக காலி செய்யும்படி கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஜூலை மாதம் வீடுகளில் உள்ள மின் இணைப்பினை துண்டித்து சென்றுள்ளனர். இதனால் அக்குடும்பங்களை சேர்ந்த படிக்கும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்கமுடியாமல் தெரு விளக்கு உள்ள இடங்களுக்கு சென்று படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் படிப்பு கேள்வி குறியாக உள்ளது. எனவே 17 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு நிரந்திர இடம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு வழங்கியும் இது வரை யாரும் நடவடிக்கை எடுக்கமுன்வராததால் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள மலை பகுதியில் சிறு சிறு மரங்கள், செடிகள் ஆகியவற்றை வெட்டி எடுத்து அங்கு”பட்டா தாங்க” என்று தங்களது கோரிக்கையை நூதன முறையில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் செதுக்கியுள்ளனர். அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் படித்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்பார்களா என்ற நம்பிக்கையில் கிராமமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 620 total views,  1 views today