வளரும் தலைமுறைகளின் எதிர்காலம் கேள்விக்குறியா?

வளரும் தலைமுறைகளின் எதிர்காலம் கேள்விக்குறியா?

May 11, 2017 0 By BAHRULLA SHA

தான் கஸ்டப்பட்டாலும் என் மகன் கஸ்டப்படக்கூடாது என மகனுக்கு என்ன தேவையோ அத்தனையும் தன் சக்திக்கு அப்பாற்பட்டு வாங்கிக்கொடுக்கும் தந்தையின் செயல்பாடு இன்றைய தலைமுறைக்கு,அவர்கள் தன்னை தானே அழித்துக்கொள்ளும் நிலையாய் இருப்பது தான் வேதனைக்குறியது…
அப்படி என்ன வளரும் தலைமுறைக்கு விதிக்கப்பட்ட விதி என நீங்கள் நினைக்கலாம்.வாருங்கள் இளம் தலைமுறையை ஒரு நேர்முகப்பார்வையோடு பார்க்கலாம். தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் செயலுக்கு மறைமுகமாக நீங்க அதாவது பெற்றோர்கள் இருப்பத்தை பார்க்கலாம்.
நவீன காலம் என்பதால் டூ வீலரும்,அன்ராய்ட் போனும் இல்லாத பசங்க இல்லை என்ற நிலைப்பாடு. டூ வீலர் கூட இல்லாமல் இருக்கலாம்,ஆனா மொபைல் இல்லாத இளசுகள் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. ஒரு மொபைல் போனின் விலை குறைந்தது 10 ஆயிரத்து குறைவில்லாமல் இருக்கலாம்.தனது ஒரு மாச சம்பளமாக கூட இருக்கும் சில பெற்றோர்களுக்கு.தன் மகன் ஆசைப்பட்டானாம் அதுக்கு மகனின் பிடிவாதம்,தாயின் சப்போர்ட் இரண்டும் இருப்பதால் தந்தைக்கு மறுக்கமுடியாத நிலைப்பாடு.
சரி வாங்கி கொடுத்தால் என்ன தப்பு என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. அந்த போனை உங்களால் எடுத்து பார்க்க முடியுமா பார்த்து தான் இருந்து இருக்கிறீர்கள. அப்படி ஒரு முறை எடுத்து இருப்பின் பார்த்து இருப்பின் உங்களுக்கு பதில் கிடைத்து இருக்கும். என் மகனா இப்படி என பதில் கிடைத்து இருக்கும்.எடுத்தாலும் உடனே பார்க்கவும் முடியாது,அதில் பாஸ்வேர்ட் போட்டு இருப்பார்கள்.
முச்சந்திக்கு முச்சந்தில் கூட்டமாக நின்று பேசுவதும் பார்ப்பதும் பரிமாறிக்கொள்வதும் இன்றைய இளசுகளின் செயல்பாடுகள். ஒரு வயதுக்கு வந்த 10 வது படிக்கும் மாணவனுக்கு ஏன் போன் என்று கேட்க முடியாத பெற்றோர்கள்,பத்து மணிக்கு மேல் தெருவில் என்ன வேலை என அதட்டாத பெற்றோர்கள்,தன் மகன் யாரோடு மணிக்கணக்கா பேசுகிறான் என கேட்காத தாய்,செய்தி பரிமாற்றம் பற்றி அறியாத நிலைப்பாடு, இது வெல்லம் போனில் என்னனென்ன பறிமாறிக்கொள்ளமுடியும்,என்பதை தெரிந்த பெற்றோர்களும் கூட தன் மகனுக்கு மகளுக்கு வாங்கி கொடுக்கும் நிலைப்பார்க்கும் போது யானை தன் தலைமீது மண்ணை வாரி தூவிக்கொள்ளுவது போல …
போன் அவசியம் அதுக்கு எல்லா வசதிகள் கொண்ட போனை ஏன் இவர்கள் தேர்ந்தேடுத்து வாங்கிக்கொள்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.
போன் இப்படி இருக்க,டூவீலருக்கு வருவோம்.இது எல்லோராலும் வாங்கிகொடுக்க முடியாது என்றாலும்,கிடைக்கும் வண்டியில் மூன்று பேர் நான்கு பேர் என அதிவேக பயணம், தெருக்களில் வேகமாக போவது பிரேக் அடித்து திருப்புவது என வீரவிளையாட்டுக்கள். வண்டியை வாங்கி கொடுத்தவர்கள் மூன்று மாதம் கழித்து பார்த்தால் இது புதுவண்டியா என கேட்டுக்கும் நிலை.
ஒருவனுடைய வண்டியை அவர்களின் நட்பு வட்டத்தில் எல்லோரும் ஓட்டாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வாடகை வண்டி போல்
பொது வண்டியா இருக்கும். அதன் பெட்ரோல் சிலவுக்கு யார் பணம், அந்த பணம் அவர் அப்பா எப்படி சம்பாரிக்கிறார் என்று அறியாமலே வருவது தான் கொடுமை. தன் ரத்ததை சிந்தி சம்பாரிக்கும் பணத்தை பல வீட்டு கழிவு நீர் போல எல்லோருக்கும் தேவையற்ற நிலையில் சிலவு ஆகும் நிஜத்தை பெற்றோர்கள் பார்த்தால் ரத்த கண்ணீர் தான் வடிப்பார்கள்.
இதை இது வெல்லாம் நம்மால் நம் பிள்ளைகளுக்கு அவர்கள் நாசமாக போக நாம் வாங்கித்தரும் பொருட்கள்.
சரி நம் அலட்சியப்போக்கால் நம் பிள்ளைகள் அடுத்து வீணாக போகும் காரியத்தை பார்க்கலாம்….
மாறி வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம்பெறுகின்றது. குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாவது உலகளாவிய பிரச்னையாக இன்று உருவெடுத்துள்ளது. இளம்பருவத்தினர் மத்தியில் இன்று பெருமளவும் நடமாடும் போதை வஸ்துக்களாக மதுவை தவிர, பான்பராக் புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, மெத்தடின் போதை ஊசி, குளோரோ பெனரமின் இருமல் மருந்து, ரப்பர் சொல்லுஷன், ஒயிட்னர், சிறிய வகை பாம்பு மூலம் போதை ஏற்றிக் கொள்வது என பட்டியல் நீள்கிறது.
இவற்றுடன் தற்போது பரபரப்பாக பேசப்படும் போதை காளானும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கல்லூரி வாசலை மிதித்து பட்டதாரிகளாக தங்கள் பிள்ளைகள் வருவார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருக்க போதைக்கு அடிமையாகி திரும்பி அவர்களை அதிர்ச்சியில் ஆளாக்கும் வேலையை இன்றைய இளைஞர்கள் கச்சிதமாக செய்கின்றனர். மாணவர்கள் தங்களது இளமை பருவத்தில் இதெல்லாம் செய்தே தீர வேண்டும்.அதுதான் நமது வாலிப பருவத்துக்கான அடையாளம்,இப்படி செய்தால் அனுபவித்தல் இதை எல்லாம் நான் அனுபவித்தவன் என மார்த்தட்டி சொல்ல முடியும்என்று கருதுகிறார்களே தவிர அதனால் தங்கள் எதிர்காலத்துக்கும், உடல் நலனுக்கும் ஏற்படும் விபரீதங்களை பற்றி சிந்திப்பதில்லை. இவர்களுடைய இத்தகைய சூழ்நிலையைத்தான் சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். இதை தவிர்த்து இன்றைய இளைஞர்கள் போதை கலாச்சாரத்தில் வீழ்வதற்கு பல காரணங்களை சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவர்களை சமுகவிரோதிகளும்,தீவீரவாதிகளும் தன் வசிய ஆற்றலாய் மயக்கி,தன் செயல்களுக்கு வன்முறைகளுக்கு பயன் படுத்திக்கொள்கிறார்கள்,அதே போல தீவிரவாதிகளும் தன் பங்குக்கு இவர்களை வேட்டையாடிக்கொள்வதும் வாடிக்கை.
இதற்கு தீர்வு தான் என்ன…
தாயிடமே இருக்கிறது.இவர்கள் செய்கின்ற தவறுகளை தன் கணவனிடம் மறைக்காமல்,உடனுக்கு உடன் தெரிவிப்பதும்,இரவு நேரம் 9 மணிக்கு மேல் வெளியே இருக்காமல் வீட்டுக்கு வந்து உறங்கிடவும்,தன் மகனின் நண்பர்கள் யார் யார் என நன்கு அறிந்து அவர்களின்
நிலைப்பாடு அனுகுமுறை அறிந்து கொள்வதும் தாயிடமே இருக்கிறது.தந்தை மனம் விட்டு மகனிடம் பேசுவதும்,தன் சம்பளம் மற்றும் கடன்கள் பற்றி பேசுவதும் நல்லது.
மாணவர்கள்,இளைஞர்களே நீங்கள் உங்களை உணராத வரை உங்களை உங்க நடத்தையை யாரும் திருத்திட முடியாது என்பதே உண்மை…

மீடியா7 கட்டுரையாளர்
கலைநிலா

402 total views, 2 views today