வரலாற்றில் இன்று_

*_வரலாற்றில் இன்று_*

*திருவள்ளுவர் ஆண்டு மாசி-24*

*_08.03.18 வியாழன்_*

*நிகழ்வுகள்*

1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1761 – வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.

1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1917 – ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 – பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.

1921 – ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.

1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.

1957 – எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.

1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.

*பிறப்புகள்*

1900 – அவார்டு அயிக்கன், ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ.1973)

1914 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ.1987)

1936 – ச. சாமிவேலு, மலேசிய அரசியல்வாதி.

1940 – செபஸ்தியான் செபமாலை, ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்.

1943 – விக்கிரமபாகு கருணாரத்தின, இலங்கை அரசியல்வாதி.

*இறப்புகள்*

1702 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650)

1844 – காருல் யோவான், சுவீடன்-நோர்வே மன்னர் (பி. 1763)

1869 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய இசையமைப்பாளர் (பி. 1803)

1873 – ராபர்ட் வில்லியம் தாம்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1822)

1922 – அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854)

1923 – யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1837)

1930 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (பி. 1857)

1957 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. 1888)

1963 – அபிராம் தெபோரின், சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. 1881)

1974 – ஜே. பி. சந்திரபாபு, தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. 1924)

1988 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (பி. 1961)

2015 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1953)

2015 – வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)

*சிறப்பு நாள்*

அனைத்துலக பெண்கள் நாள்

மீடியா 7 செய்திகளுக்காக நேரலையில் சென்னை அருண்…

349 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close