வரலாற்றில் இன்று……

*நிகழ்வுகள்*

*1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.*

*1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.*

*1857 – பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.*

*1878 – ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.*

*1905 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினான்.*

*1918 – முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.*

*1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.*

*1933 – ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.*

*1938 – சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.*

*1939 – மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.*

*1942 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் ஜப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.*

*1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.*

*1945 – இரண்டாம் உலகப் போர்: முன்னர் நடுநிலையாக இருந்த பின்லாந்து அச்சு நாடுகளுக்கெதிராக போரை அறிவித்தது.*

*1966 – பிரித்தானிய போயிங் 707 பயணிகள் விமானம் ஒன்று ஃபியூஜி மலையில் விபத்துக்குள்ளானதில் 124 பேர் கொல்லப்பட்டனர்.*

*1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.*

*1971 – இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.*

*1974 – பாரிஸ் அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் கொல்லப்பட்டனர்.*

*1974 – லூத்தரன் சபைகளுல் சில கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தன.*

*1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.*

*1992 – பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.*

*2002 – சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.*

*பிறப்புகள்*

*1839 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)*

*1845 – கியார்கு கேன்ட்டர், உருசிய-செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1918)*

*1847 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1922)*

*1882 – சார்லசு பொன்சி, இத்தாலியத் தொழிலதிபர் (இ.1949)*

*1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)*

*1944 – ஜெயசந்திரன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்*

*1950 – திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர்.1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)*

*1955 – தோர்ச்யீ காண்டு, இந்திய அரசியல்வாதி (இ. 2011)*

*1955 – ஜஸ்பால் பட்டி, இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2012)*

*1970 – இன்சமாம் உல் ஹக், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்*

*1982 – ஜெசிக்கா பைல், அமெரிக்க நடிகை, பாடகி*

*1985 – வரலட்சுமி சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகை*

*⚫இறப்புகள்*

*1644 – குரு அர்கோவிந்த், ஆறாவது சீக்கிய குரு (பி. 1595)*

*1703 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், மெய்யியலாளர் (பி. 1635)*

*1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பி. 1618)*

*1900 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1847)*

*1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர்*

*2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1930)*

*2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பி. 1929)*

*2016 – பெர்த்தா காசிரீஸ், ஒந்துராசு சூழலியலாளர் (பி. 1973)*

*2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பி. 1962*

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை அருண்

2,008 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close