வரலாற்றில் இன்று……

*நிகழ்வுகள்*

455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர்.

1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.

1845 – இரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

1861 – இத்தாலி இராச்சியம் உருவானது.

1891 – பிரித்தானியாவின் யூட்டோப்பியா என்ற கப்பல் ஆன்சன் என்ற ஆத்திரேலியக் கப்பலுடன் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 562 பேர் உயிரிழந்தனர்.

1919 – றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

1939 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது.

1941 – வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1942 – மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1957 – பிலிப்பீன்சு, சேபு என்ற இடத்தில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமன் மக்சேசே உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஏவியது.

1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.

1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.

1966 – ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் எசுப்பானியாவுக்கு அருகில் கண்டுபிடித்தது.

1988 – கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் உயிரிழந்தனர்.

1992 – ஆர்ஜெண்டீனாவில் இசுரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.

1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.

2000 – உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

*பிறப்புகள்*

1920 – சேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேசத்தின் 1வது அரசுத்தலைவர் ரி. 1975)

1926 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2006)

1939 – பங்காரு லட்சுமண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)

1940 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கை ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் (இ. 2002)

1975 – புனீத் ராச்குமார், இந்திய நடிகர், பாடகர்.

1990 – சாய்னா நேவால், இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை.

*இறப்புகள்*

1846 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1784)

1853 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1803)

1956 – ஐரீன் ஜோலியட் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1897)

1957 – ரமன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (பி. 1907)

*சிறப்பு நாள்*

குழந்தைகள் நாள் – வங்காளதேசம்

தேசிய முவாய் போர நாள் – தாய்லாந்து

புனித பேட்ரிக்கின் நாள் – அயர்லாந்து, மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகள்

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை சிவசித்தன் அருண்

309 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close