வரலாற்றில் இன்று

*மீடியா 7 வழங்கும் வரலாற்றில் இன்று*

*15➖03➖18 வியாழக்கிழமை*

*⌨திருவள்ளுவர் ஆண்டு (2048-49 நடப்பு) பங்குனி➖01*

*⌨மார்ச் 15 (March 15)*

*நிகழ்வுகள்*

கிமு 44 – ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் ஜெர்மானிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்கேரியஇராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

1493 – கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின்திரும்பினார்.

1776 – தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

1802 – இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1815 – நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.

1848 – ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில்மெல்பேர்ணில் ஆரம்பமானது.

1917 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் த்சார் மன்னன் முடி துறந்தான்.

1922 – எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்னனானான்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியப் படைகள் உக்ரேனின் ஹார்க்கொவ் நகரை சோவியத்இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.

1961 – தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.

1970 – எக்ஸ்போ ’70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

1984 – விடுதலைப் புலிகளின் ஆதிகாரபூர்வ ஏடு விடுதலைப் புலிகள் வெளியிடப்பட்டது.

1985 – முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

1988 – ஈராக்கியப் படைகள் குருதிய நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1990 – பிரித்தானிய ஊடகவியலாளர் பர்சாட் பாசொஃப்ட் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டார்.

1990 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1991 – இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004 – சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2007 – இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

*பிறப்புகள்*

270 – நிக்கலசு, கிரேக்க ஆயர், புனிதர் (இ. 343)

1767 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (இ. 1845)

1854 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ.1917)

1860 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளர் (இ.1930)

1914 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1979)

1915 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ.1973)

1919 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (இ. 2014)

1929 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2013)

1930 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர்.

1930 – மார்ட்டின் கார்ப்பிளசு, நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர்.

1934 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (இ.2006)

1938 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (இ.2012).

1950 – கே. வி. தங்கபாலு, தமிழக அரசியல்வாதி

1956 – ஓவியர் ஜீவா, தமிழக ஓவியர், திரைப்பட விமர்சகர், எழுத்தாளர்.

1959 – ரென்னி ஹர்லின், பின்லாந்து இயக்குநர்.

1975 – வெசிலின் தோப்பலோவ், பல்கேரிய சதுரங்க வீரர்.

1986 – ஜெய் கோர்ட்னி, ஆத்திரேலிய நடிகர்.

*இறப்புகள்*

கிமு 44 – யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு-100)

220 – சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155)

931 – ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)

1206 – கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149)

1660 – லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவர், கத்தோலிக்கப் புனிதர்

சென்னை செய்தியாளர் அருண்

412 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close