வரலாற்றில் இன்று

*வரலாற்றில் இன்று*

*09-03-18 வெள்ளிக்கிழமை*

மார்ச் 9 (March 9)

*நிகழ்வுகள்*

1500 – பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.

1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

1961 – சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.

1967 – அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.

1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.

2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.

*பிறப்புகள்*

1818 – செயிண்ட் கிளெயர் டிவில்லி, பிரான்சிய வேதியியலாளர் (இ. 1881)

1928 – மார்ட்டின் க்ராம்பன், செருமானிய குறியீட்டியல் வல்லுநர் (இ. 2015)

1931 – கரண் சிங், இந்திய அரசியல்வாதி

1951 – சாகீர் உசைன், இந்திய தபேலா இசைக்கலைஞர்

1954 – டி. எல். மகராஜன், தமிழகத் திரைப்பட பின்னணிப் பாடகர்

1956 – சசி தரூர், இந்திய அரசியல்வாதி

1974 – ஜோஷ்வா ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

*இறப்புகள்*

1936 – யுக்தேஷ்வர் கிரி, இந்திய யோகி (பி. 1855)

1992 – மெனசெம் பெகின், இசுரேலின் 6வது பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)

1994 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1908)

2003 – வீ. ப. கா. சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுத்தவர் (பி. 1915)

2005 – எம். பழனியாண்டி, இந்திய அரசியல்வாதி (பி. 1918)

*சிறப்பு நாள்*

லெபனான் – ஆசிரியர் நாள்

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை அருண்

1,024 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close