“வரலாற்றில் இன்று”

*வரலாற்றில் இன்று*

*05➖03➖18*

*நிகழ்வுகள்*

1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.

1824 – பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.

1940 – சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.

1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.

2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.

*பிறப்புகள்*

1871 – ரோசா லக்சம்பேர்க், போலந்து-உருசியப் பொருளியலாளர், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)

1898 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (இ. 1976)

1913 – கங்குபாய், இந்துத்தானி இசைப் பாடகி (இ. 2009)

1916 – பிஜு பட்நாயக், இந்திய அரசியல்வாதி (இ. 1997)

1931 – கே. ஏ. சுப்பிரமணியம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1989)

1934 – டேனியல் கானமென், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய-அமெரிக்கப் பொருளியலாளர்

1938 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2011)

1958 – நாசர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1959 – சிவ்ராஜ் சிங் சௌஃகான், மத்தியப் பிரதேச முதலமைச்சர்

1984 – ஆர்த்தி அகர்வால், இந்திய திரைப்பட நடிகை (இ. 2015)

*⚫இறப்புகள்*

254 – முதலாம் லூசியஸ் (திருத்தந்தை) (பி. 200)

1827 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1749)

1827 – வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1745)

1903 – உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)

1953 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1878)

1966 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (பி. 1889)

1994 – வ. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1930)

2006 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1926)

2013 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர், தமிழறிஞர் (பி. 1936)

2013 – ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (பி. 1954)

2013 – ராஜசுலோசனா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1935

*சிறப்பு நாள்*

மர நாள் (ஈரான்)

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை அருண்

695 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close