வரலாற்றில் இன்று

*வரலாற்றில் இன்று*

*04➖03➖18*

*

*இன்றைய பழமொழி..*

“வளைந்து குனியும் நாணலைச் சூறைக் காற்று பிடுங்கி எரிவது இல்லை, ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களையே அது வேரோடு சாய்க்கிறது.
ஆகையால் வாழ்வில் அகங்காரம் மற்றும் ஆணவத்தோடும் நிமிர்ந்து நிற்க்க வேண்டாம்

*நிகழ்வுகள்*

1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.

1351 – சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.

1493 – கடலோடி கொலம்பஸ் அமெரிக்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.

1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.

1665 – இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.

1793 – பிரெஞ்சுப் படைகள் நெதர்லாந்தின் கீர்ட்ரூடென்பேர்க் நகரைக் கைப்பற்றினர்.

1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.

1813 – நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜேர்மனியின் பேர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.

1877 – எமிலி பெர்லீனர் ஒலிவாங்கியைக் கண்டுபிடித்தார்.

1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.

1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.

1894 – ஷங்காயில் ஏற்பட்ட பெரும் தீயில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.

1899 – குயீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1908 – ஒகைய்யோவில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.

1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.

1977 – ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.

1980 – ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.

1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.

2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.

2001 – போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.

2006 – அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

*பிறப்புகள்*

1678 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 1741)

1769 – எகிப்தின் முகமது அலி (இ. 1849)

1847 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904)1854 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. 1945)

1877 – கர்ரெட் மார்கன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1963)

1902 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971)

1904 – ஜார்ஜ் காமாவ், உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968)

1924 – கு. கலியபெருமாள், தமிழக செயற்பாட்டாளர் (இ. 2007)

1935 – டியு குணசேகர, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி1938 – அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006)

1944 – மூ. அருணாச்சலம், தமிழக அரசியல்வாதி (இ. 2004)

1947 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)

1965 – பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்.

1986 – மைக் கிரிகேர், பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.

*⚫இறப்புகள்*

1193 – சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137)

1941 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858)

1967 – சண்முக ராஜேஸ்வர சேதுபதி, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1909)

1978 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1889)

2011 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1930)

2016 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1947)

2016 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. 1933)

253 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close