வரலாற்றில் இன்று

*நிகழ்வுகள்*

1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.

1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

1889 – ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.

1917 – ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன்அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.

1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.

1951 – யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.

1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள்நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.

1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.

1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.

1979 – கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.

1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.

2004 – கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

*பிறப்புகள்*

1504 -குரு அங்கது தேவ், சீக்கிய குரு (இ. 1552)

1596 -ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1650)

1685 -யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750)

1732 -ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809)

1865 -ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (இ. 1887)

1884 -அதிரியான் வான் மானன், டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1946)

1890 -வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (இ.1971)

1898 -சா. ஜே. வே. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)

1908 -பிலிப் சைல்ட்சு கீனான், அமெரிக்க வானியலாளர் (இ. 2000)

1912 -ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர், இலங்கை அரசியல்வாதி

1914 -ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (இ.1998)

1928 -இராம. அரங்கண்ணல், தமிழக எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி

1934 -கமலா தாஸ், மலையாள கவிஞர் (இ. 2009)

1938 -சீலா தீக்‌சித், கேரளத்தின் 22வது ஆளுநர்

1948 -ஆல் கோர், அமெரிக்காவின் 45வது துணை அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்1950 -ஹல்தர் நாக், இந்தியக் கவிஞர்

1962 -ராம்கி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

*இறப்புகள்*

1751 -பிரெடரிக், வேல்சு இளவரசர் (பி. 17071861 -என்றி மார்ட்டின், ஈழத் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் போதகர்

1917 -எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர் (பி. 1854)

1965 -தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத் தமிழறிஞர் (பி. 1904)

1972 -மீனாகுமாரி, இந்தியத் திரைப்பட நடிகை (பி.1932)

1980 -ஜெசி ஓவென்ஸ், அமெரிக்க தடகள வீரர் (பி. 1913)

1981 -சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கை அரசியல்வாதி (பி. 1924)

1995 -செலெனா, அமெரிக்கப் பாடகி (பி. 1971)

1997 -இலைமன் சுட்டிராங் சுபிட்சர், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914)

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் அருண்.

198 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close