வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று

*நிகழ்வுகள்*

1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கிலகுடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.

1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யாஆகியன வரையறுத்தன.

1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.

1895 – முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.

1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசிஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.

1960 – ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவதுகாப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.

1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2004 – ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2006 – பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.

*பிறப்புகள்*

1394 -உலுக் பெக், பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1449)

1799 -பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர், செருமானிய வானியலாளர் (இ. 1879)

1868 -இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1953)

1869 -எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)

1873 -யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய-அர்கெந்தீன மருத்துவர், பெண்ணியவாதி (இ. 1932)

1877 -தி. வே. சுந்தரம், தமிழகத் தொழிலதிபர் (இ.1955)

1894 -சூரியா சென், இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (இ.1934)

1909 -நேதன் ரோசென், இசுரேலிய இயற்பியலாளர் (இ. 1995)

1938 -கோவை மகேசன், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 1992)

1942 -ஷீலா, தென்னிந்திய நடிகை

1955 -சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2011)

1964 -உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, செயற்பாட்டாளர்.

1976 -ரீஸ் விதர்ஸ்பூன், அமெரிக்க நடிகை.

*இறப்புகள்*

1627 -பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.

1832 -யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய புதின எழுத்தாளர் (பி. 1749)

1896 -தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1822)

1952 -டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1வது பிரதமர் (பி. 1884)

1977 -ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியலாளர், அரசியல்வாதி (பி. 1904)

2004 -அகமது யாசின், பாலத்தீனத் தலைவர் (பி. 1937)

2005 -ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1920)

2007 -பார்துமான் சிங் பிரார், இந்தியத் தடகள விளையாட்டு வீரர் (பி. 1927)

2016 -ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி.1969)

*சிறப்பு நாள்*

_*உலக நீர் நாள்*_

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் சிவசித்தன் அருண்

1,430 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close