வத்தலக்குண்டு அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

வத்தலக்குண்டு அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்  அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டி புதுமை புனிதர் சவேரியார் கோவில் அருகே உள்ள சிறிய  தெருவில் ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அந்த தெருவைச் சேர்ந்த சதானந்தம் வயது 80 என்பவர் வட்டார வளர்ச்சி  அலுவலர் முதல் அமைச்சர் தனிப் பிரிவு வரை புகார் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 6ந்  தேதி நேரில் சென்று அளந்து ஆய்வு செய்தனர். அதில் சதானந்தமும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள்
ஆக்கிரமிப்பு அனைத்தையும் பொக்லைன் மூலம் அகற்ற தொடங்கினர் அப்போது சிறுமணியம்மாள் என்ற 75 வயது மூதாட்டி பொக்லைன்  முன்பு படுத்து மறியல் செய்ததால் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்பட்டது. அளவு கல் ஊண்டி விட்டு அதிகாரிகள் திரும்பினர்.அதன்  பிறகு சதானந்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகாவுக்கு தொடர்ந்து இமெயில் அனுப்பி மன உளச்சல் ஏற்படுத்தி பணி செய்ய  விடாமல் தொந்தரவு செய்து வந்தார். விஜயசந்திரிகா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு  புகார் செய்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா,கிராமநிர்வாகஅதிகாரி  நவாஸ்,சப்-இன்ஸ்பக்டர் நாகராஜன், துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் கார்மேகம், சர்வேயர் ஜெயசீலன், ஊராட்சி செயலாளர்  மணிகண்டன் மற்றும் போலீசார் மேலக்கோவில்பட்டிக்கு சென்றனர்.சர்வேயர் மீண்டும் அளந்தபோது சதானந்தம் அதிகாரிகளை பார்த்து  நோட்டீஸ் கொடுக்கவில்லை. முன்னறிவிப்பு செய்யவில்லை. வந்துள்ள அதிகாரிகள் பட்டியல் எனக்கு முதலில் தர வேண்டும் என்று
பேசினார்.அளந்து சரிபார்த்த பின்னர் ஒரே நேரத்தில் 5 ஆட்களை கொண்டு சதானந்தம் வீட்டு முன்புற கைபிடிசுவர், படிகள்,
செப்டிக்டேங், கஸ்பார் என்பவர் பாத்ரூம் ஆகியவற்றை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா

219 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply