வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளற்பெருமான் என்கின்ற வள்ளலார். இவர் சென்னை, கருங்குழி, வடலூர், ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபையை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கபட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுகுப்பத்தில் சித்தி பெற்றார்
தொடர்ந்து மாதந்தோறும் தைப்பூச நட்சத்திரத்தன்று சத்தியஞான சபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.
தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 148 வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
விழாவையொட்டி இன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7-30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுகுப்பம் ஆகிய இடங்களிலும் காலை 10 மணிக்கு சத்தியஞான சபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மீடியா 7 செய்திக்காக செய்தியாளர் அகிலன் மணி

605 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close