IMG-20170117-WA0021

சென்னை மாவட்ட ஜெ. தீபா பேரவையின் சார்பில் ஆர் கே நகரில் கட்சி அலுவலகம் மேயர் பாசுதேவன் தெருவில் திறக்கப்பட்டது ஒருங்கிணைப்பாளர் கே கே கோபிநாத், தலைமையில் முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருஉருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதையும், மறைந்த ஜெயலலிதா படத்திற்க்கும் மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது

இதனைதொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் கே கே கோபிநாத் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து குத்து விளக்கை ஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்

IMG-20170117-WA0022

இதில் கே.கே. கருப்பையா, பி. வெங்கடேசன், ஜி. சிதம்பரம், வி. ராஜசேகர், கே. சுரேஷ், ஏ. தண்டபாணி, கே கே. கிஷோர், ஆர் கே நகர் சி. பாலு, ரசியா, ஜரினாபேகம், பி கே கணேசன், எல். ராதா, மற்றும் மகளிரணியினர் உள்பட 500 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இதில் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே கே கோபிநாத் பேசுகையில் மறைந்த எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு அவரின் ஆட்சியின் போது ஏழைகளுக்கு என்னற்ற பல திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றினார்

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என அவரது தாரக மந்திரத்தின் அடிப்படையில் அம்மா அவர்களது உருவ சாயலில்
மறு உருவான ஜெ தீபா அம்மா அவர்களால் தான் ஒன்னறை கோடி தொண்டர்களையும் அதிமுக கழக கட்சியையும் காப்பாற்றும் சக்தி எங்கள் தீபா அம்மாவுக்கு உண்டு.

இன்று அமரர் எம்ஜிஆர் பிறந்த நூற்றாண்டு நிறைவு நாளில் அம்மா ஜெ. தீபா பேரவை அலுவலகத்தை திறப்பதில் நான் மட்டும் அல்ல தற்போது தீபா பேரவையில் சென்னை மாவட்டத்தின் சார்பில் பெருமை கொள்கிறேன்
மேலும் தீபா பேரவையில் சார்பில் 4000-க்கும் மேற்பட்டோர் வடசென்னையில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன

ஆர் கே நகரில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஏன் என்று கேட்க கூட இப்பகுதியில் நாதியில்லை முன்பு ஜெயலலிதா ஆட்சியின் போது சீராக செயல்பட்ட நலத்திட்டங்கள் தற்போது முற்றிலும் நின்று விட்டது முதியோர் உதவித்தொகை உள்பட பலதிட்டங்கள் முடங்கிவிட்டன.

அதிமுக தொண்டர்கள்களின் எழுச்சியின் சின்னமாக இனி தமிழக மக்களுக்கு தொண்டாற்றிட எங்க தீபா அம்மாவால் மட்டுமே முடியும் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற அடிப்படையில் ஜெ. தீபா பேரவை சென்னை மாவட்டத்தில் மக்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்

 649 total views,  2 views today