கும்பகோணம் ஜூலை 9

நாட்டின் விவசாயத்திற்கு அடுத்து முக்கியமான தொழிலான மோட்டார் வாகன போக்குவரத்து தொழில் ஈடுபடும் மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மண்ணைப் போடும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிடக்கோரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உள்நாட்டு பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்து தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து சட்டம் 2017 அமுல்படுத்துவதை நிறுத்தவும்

அநியாய இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கைவிடவும் தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்களுக்கு உடனடியாக வாடகை தொகையை முழுமையாக வழங்கிடவும் சாலை விபத்தில் மரணம் அடையும் ஓட்டுநர்களுக்கு நலவாரியத்தில் 5 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும் தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் கே ரவி தலைமையேற்றார் மாநில துணை தலைவர்கள் ம. கண்ணன் பி.பார்த்தசாரதி மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் ஆர். ஜெயக்குமார் கௌரவத் தலைவர் கே செந்தில் குமார் நகர தலைவர் தாடி சாமிநாதன் நகர செயலாளர் கார்த்திகேயன் தஞ்சை மாவட்ட ஆட்டோ தலைவர் எல் ஜி மனோகரன் எல் பி எஃப் நகர செயலாளர் அருண், ராஜகோபால் ,மகாராஜன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்

ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன மெக்கானிக்குகள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர்கள் சிறு வாகன உரிமையாளர்கள் சாலைப் போக்குவரத்து வாகன தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

347 total views, 3 views today